பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

143

வனை நோக்கி, “அரச வேலி அல்லால் வேறு குற்றமற்ற காவல் ஒன்றும் இல்லை,’ என்று கூறி, என்னை இங்கே அரசன் காப்பான் என்று தனித்து விட்டு, காசி யாத்திரை சென்றீர். அவ்வேலியின் காவலால் இந்நாள் வரை மனக் கவலையற்று வாழ்ந்து வந்தேன். இன்று அவ்வேலி காவாதோ?” என்று கூறினள். அச்சொல் லைக்கேட்டு மனைக்கு வெளியில் நின்ற பாண்டியன்செவி சுடப்பெற்று, மனம் வருந்தி, அந்நாள்வரை அப்பெண் மணியின் கற்புக்குக் கேடு வராவண்ணம் தானே பாதுகாத்திருந்தும், அன்று தான் ஆராயாமற் செய்த செயலால் கீரந்தை தன் மனைவியின் கற்பு நிலையில் ஐயுறுதற் கிடமுண்டாயிற்றே யென்று மிகவும் கவலை கொண்டு, மறு நாள் பலருமறியத் தன் கையைக் குறைத்துப் பொற் கை பெற்றுப் பொற்கைப் பாண்டியன் ஆன வரலாறும் நீ அறிவாய். இந்நெடுஞ்செழியனே திருத்தங்கால் என்ற ஊரில் வாழ்ந்த வார்த்திகன் என்ற 'வேதியன் பொருட்டுச் செய்த அறச் சிறப்பும் கேட்டறிந்திருப்பாய். இத்தகைச் சிறப்புள்ள பாண்டியர் குலச் செம்மல் கோ முறை பிழைத்த காரணம் கேட்பாயாக: ‘ஆடி மாதத்திலே கிருஷ்ணபக்ஷத்தில் அஷ்டமி திதியில் வெள்ளிக்கிழமையன்று கார்த்திகை பரணி என்ற இரண்டு நக்ஷத்திரங்களும் இருக்கும் காலத்திலே தீப்படுதலால் இம்மாபெரு நகரம் மதுரை கேடுறும்,’ என்றதோர் உரை உளது. மேலும், நின் கணவன் கொலையுண்ட காரணம் கூறுவேன்; கேள்: முன்பு கலிங்க நாட்டில் உள்ள சிங்கபுரத்தரசனாகிய வசுவென்பவனும் கபில புரத்தரசனாகிய குமரன் என்பவ-