பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

பாண்டிய மன்னர்

னும் தம்முட் பகைகொண்டு ஒருவரை யொருவர் வெல்லக் கருதியிருந்தனர். அப்பொழுது சிங்க புரத்துக் கடை வீதியிற் சென்று இயல்பாகப் பண்டம் விற்றுக் கொண்டிருந்த சங்கமன் என்ற வணிகனை அந்நகரத்து அரச சேவகனாகிய பரதனென்பான் இவன் பகையரசனாகிய குமானது ஒற்றனென்று கூறித் தன்னரசனுக் கறிவித்துக் காட்டிக் கொலை செய்துவிட்டான். அச் சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் மிக்க துயரமுற்றுப் பதினான்கு நாள் பலவிடத்தும் அலைந்து, பின்பு ஒரு மலையின் மேல் ஏறிக் கணவனைச் சேரக்கருதித் தன் உயிரை விடும் நிலையில், ‘எமக்குத் துன்பம் செய்தோர் மறு பிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக,’ என்று சாபமிட்டிறந்தாள். அப்பரதன் நின் நாயகனாகிய கோவலனாய்ப் பிறந்தான். ஆதலின், நீவிரும் இந் நகரில் இவ்விதமான பெருந்துயர் அடைந்தீர்.

“உம்மை வினைவந் துருத்த காலைச்

செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது.”

ஆகையால், இந்நாட்டினீங்கி வேறொரு நாட்டில் இன்னும் பதினான்கு தினங்களில் நினது நாயகனை வானவ உருவிற் காண்பாய்.”

இவ்வாறு மதுராபதி என்ற தெய்வம் கண்ணகிக்குச் செய்தியெல்லாம் விளக்கியுரைத்து, அவளது சினத்தை அடக்கியமையச் செய்து, மதுரை நகர் முழுதும் பற்றி யெரிந்த தீ அடங்கிக் குளிருமாறு செய்துகொண்ட பிறகு, கண்ணகி அங்கிருந்து புறப்படலாயினள். அவள் அப்பொழுது, “என் உள்ளத்துக் கோயில் கொண்ட நாயகரைக் கண்ட பின்பு அல்-