உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

145

லாமல், அதன் முன்பு யான் இருத்தலும் நிற்றலும் செய்யேன்,” என்று கூறி, துர்க்கை கோயில் வாயிலிலே தன் கைக் கடகத்தை உடைத்தாள்.

‘கீழ்த்திசை வாயிலாற் கணவனோடு புகுந்தேன்; மேற்றிசை வாயிலால் வெறுமையோடுதிரும்புகின்றேன்,’ என்று கூறி, இரவும் பகலும் மயங்கி வருந்திப் புறப்பட்டாள். துயரமே உருவெடுத்ததுபோலப் பதினான்கு நாட்கள் அலைந்து இறுதியில் திருச்செங்குன்று என்னும் மலைமீது ஏறித் தேவர்கள் வந்து வாழ்த்தத் தேவவுருவொடு வந்த கோவலனொடு விமானம் ஏறி உயர்ந்த வுலகம் புகுந்தாள்.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணமாற்—றெய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி [வமாய்

விண்ண கமா தர்க்கு விருந்து.” [1]

அன்று தொட்டுப் பாண்டியன் நாடு மழை வளம் இழந்து, வறுமை யெய்தி, வெப்பு நோயும் குருவும் தொடாக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் என்ற இளஞ்செழியன் கண்ணகி தேவிக்கு விழவொடு சாந்திசெய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கினது.

முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்

பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்

  1. சிலப்பதிகாரம் - கட்டுரை காதை.