பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பாண்டிய மன்னர்

அதிகாரிகள் செய்ய லானார்கள். நகரங்களைக்காட்டிலும் கிராமங்களிலே திருவின் செல்வியும் கலையின் செல்வியும் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவதைக் காண்பது எளிதாயிற்று நகரங்களில் அவ்வப்பொழுது அவசியங் கருதி அறிவுடைப் பெரியார் பலர் கூடி உலகிற்குப் பொது நன்மைக்குதவும் அரும்பொருள்களை நூல்களாலும் உரைகளாலும் வெளியிட்டு வந்தனர். சங்கத்தார் ஆதரவும் அங்கீகாரமும் பெறாத எவ்வகை நூலும் நாட்டில் வழங்க இயலாமையால், எந்நாட்டுப் புலவரும் இந்நாடடைந்து, தம் செய்யுட்களின் சிறப்பைத் தமிழகத்துக்கு அறிவிப்பாராயினர்.

பாண்டிய நாட்டளவில் தன் ஆட்சி அடங்குவது பொருத்தம் இன்றென எண்ணித் தமிழ் வழங்கும் தென்னாடு முழுவதையும் அரசன் தன் ஆளுகைக்குள்ளடக்க முயன்றனன். சில சிறிய நாடுகளுக்குத் தன் சேனைத்தலைவரைப் பெருஞ்சேனையோடு அனுப்பினன். சென்றவிடமெல்லாம் வெற்றியே பெற்றுத் திரும்பிய சேனா நாயகர்க்கும் படைஞர்க்கும் ஏற்ற வரிசைகள் செய்தனன். வென்ற நாடுகளில் எல்லாம், முன்னிருந்த அரச பரம்பரையாரையே ஆள வைத்து அவர்களைத் தன்கீழ் அடங்கியிருக்கச் செய்தனன், கோல் கோடிய அரசர் இருந்த நாடுகளைக் கைக்கொண்டு, அவ் வரசுரிமைக்குரியார் எவரேனும் இருப்பராயின் அவர் அப்பதவி வகிக்கத் தகுதியுடையராவென வாராய்ந்து, அறிவுடைப் பெரியார் பலரை அமைச்சர்களாயமர்த்தி, அவர்கள் உதவியைக் கொண்டு அறநெறிக்கு மாறுபாடின்றி. அரசாள்கவென அமைத்தனன்; புல-