உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

11

வருட் பெரியார் தமிழகத்துள் எந்நாட்டுள் வாழ்வோராயினும் தன்னாட்டுக்கு வருவித்து வாழ வைத்தான்; நாட்டில் பல விடங்களிலுமுள்ள சிவாலயங்களுக்கு அநேக கிராமங்களை மானியமாக விட்டு, அவ்வவ்வாலயங்களில் நித்திய நைமித்திகாதிகள் முறையே நடை பெறுமாறு வேண்டுவன செய்வித்தான். தமிழ் நாடு முழுவதும் தன்னையே அரசன் என்று கொண்டாடவும் தன் ஆணையே செல்லவும் செய்துகொண்டும் அவன் மனம் திருப்தியடையவில்லை. பயிற்சி பெற்ற படைஞர்க்கும் படைத்தலைவர்க்கும் இன்னும் கொஞ்சம் போர் வினை கொடுக்கவேண்டு மென்று விருப்பம் கொண்டும், தமிழ் நாட்டுக்கு வடக்கிலுள்ள பிற நாடுகளையும் அடக்கவேண்டும் என எண்ணம் கொண்டும் மேன்மேலும் சேனைகளைச் சேகரித்துத் திக்விஜயம் செய்யப் புறப்பட்டான். உரிய நாளிலே நல்லோரையிலே பெரியோர் ஆசீர்வாதமும் இறைவன் திருவருளும் பெற்றுத் தமிழ்நாட் டரசுரிமையை வகித்து வரும் பொறுப்பை அமைச்சருட் பெரியார் ஐவர் கையில் வைத்து வலிமிக்க சேனாதிபர் புடை சூழப் புலவர் பலர் உடன் வர, வடநாட்டுப் போர்க்கு உரிய கோலம் கொண்டு எழுந்தான். புலவர் பலர் நெருங்கி நின்று, ‘வேந்தே, வாழிய; வென்று மீளுக,’ என வாழ்த்தி நின்றனர்.

சேனைகளெல்லாம் முன்னே அணி வகுத்துச் சென்றன வழி செல்வோர் படைஞர்க்கு முன் சென்று காடுகளைச் சீர்திருத்தி வழியமைத்தும் நதிகள் முதலியவற்றைக் கடத்தற்குரிய சாதனங்களை அமைத்தும் சென்றனர். செந்தமிழ் நாட்டெல்லையைத் தாண்டி,