பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பாண்டிய மன்னர்

வகைத் தீங்கும் இயற்றாது அற நெறி கடைப்பிடித்து அரசியற் குதவ வேண்டுவன செய்துளேன். அமைச்சரும் அறிவரும், புலவரும், படைஞரும், படைத்தலைவரும், பிறரும் செய்யும் உதவியால் எண்ணிய எண்ணமெல்லாம் நன்கு நிறைவேறியுள. இனி யான் செய்தற்குரியவை யாவை யுள என்பதே என் சிந்தையில் நிறைவதாம்,” என எண்ணினான்

இவ்வாறு அரசர் தலைவன் சில நாட்களாக எண்ணமிடுவதை அவன் முகக் குறிப்பால் அறிந்த புரோகிதர் தலைவர் அவனை அடைந்து, முக மலர்ச்சியோடு பின் வருமாறு கூறினர் :

‘அரசரேறே, சந்திர வமிச சூடாமணியே, நாடுகள் பல நம் நாட்டுக் கடங்கவும், மொழிகள் பலவும் நம் மொழிக் கடங்கவும், அரசுகள் பிற நம் அரசுக் கடங்கவும் செய்து, கீர்த்தியும் பிரதாபமும் சிறப்பப் பெற்றனை. நின் முன்னோர்கள் சென்ற நெறியில் நீயும் சென்று, அறம் பொருள் இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருளும் பெற்றாய். இனி அடைய முயலவேண்டுவதாயிருப்பது நான்காவது உறுதிப்பொருளே. அதனை அடையும் பொருட்டுச் சொல்லப்படும் பல வகைத் துறைகளும் நம் நாட்டில் அறிவுடையார் பலரால் நன்கு விளக்கப்பட்டுள. முக்கியமாக இறைவன் திருவருள் வசத்ததாகிய வேதத்திலே விதிக்கப்பட்ட மார்க்கங்கள் மூன்று. அவை கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம், ஞானமார்க்கம் என்பன. கர்மமார்க்கத்தில் காம்ய கர்மம், நிஷ்காம்ய கர்மம் என்ற இரண்டு முறையிலும் பயின்று தேர்ந்து மனம் விடுதலைபெற்ற பிறகே ஞான மார்க்கத்தில் நுழையலாம். பக்தி மார்க்கம், இரண்டு வழிகளிலும் கலந்து அநேக ஜன்மங்களால் முயன்று பயனை அடைய உதவுவதாம். கர்ம மார்க்கம் மிகவும் கடினமா-