பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

III

ரசர் பெருமானாகிய பாண்டியன், பாரத பூமி முழுவதையும் தன் ஆளுகைக்குள்ளடக்கி, குமரி முதல் வடவிமயம்வரை ஒரு மொழி வைத்து உலகாண்டு வரும் நாளையில், பாணரும், கூத்தரும், விறலியரும், வயிரியரும், புலவரும், பிறரும் அவனிடம் பல திசைகளிலுமிருந்து வந்து தத்தமக்குரிய வரிசைகள் பெற்றுச் செல்வாராயினர். அவன் போரில் வென்ற நாடுகளையும் புலவர்க்கும் பிறர்க்கும் மனம் பூரிக்கக் கொடுத்தனன். நாடு அனைத்தையும் அடக்கி யாண்டும், கொடுக்கத்தக்கார்க்கு ஏற்ற வண்ணம் கொடுத்தும், இன்னும் தன் பிறப்பின் நோக்கம் நிறைவேற ஏதோ வொன்று குறையாய் நிற்பதாக அவனுக்குத் தோன்றியது: “அரசராவார் செய்தற்குரிய வினைகள் யான் செய்த இவையேயோ? இன்னும் வேறு யாவேனும் உளவோ? நாட்டிலே அமைதியை நாட்டினன்; கல்வியை வளர்த்தனன்; செல்வ நிலையைச் செழிக்கச் செய்துளேன்; அறிஞரை ஆயிரக் கணக்கில் நம், நகர் அடைவித்துளேன்; வேளாண்மையும் கைத்தொழிலும் என் இரு கண் மணியேபோலப் போற்றி வேண்டுவன செய்துளேன்; பகைவரும் கள்வரும் வன விலங்குகளும் நாட்டு மக்க ளுக்கு ஊறு செய்யும் வலிமை பெறா வண்ணம் அடக்கிவிட்டேன். யானும் என்னைச் சார்ந்தாரும் என் கீழ் அதிகாரம் வகிப்போரும் எவர்க்கும் எவ்-

2