இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
பாண்டிய மன்னர்
இச்செய்யுளைக் கேட்ட அரசன் மனம் பூரித்து, அப்புலவர்க்குச் சிறந்த தொருகளிறும் தேரும் நல்கி யுபசரித்தனன். அவரும் மேலும் மேலும் வாழ்த்தி மகிழ்ந்தனர். அரசன் பரிவாரங்கள் புடை சூழ அரண்மனை யடைந்தான் ; மங்கள கோஷங்களோடு அகம் புகுந்தான். தமிழ் மக்கள் எங்கும் சஞ்சரிக்க வேண்டுவன செய்தமைக்காக அவன் மன மகிழ்ந்து அரண்மனையில் தன் அந்தரங்க அறையிற் சிறிது இளைப்பாறலாயினன்.