பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

பாண்டியர் வரலாறுகளைச் சமீபகாலத்தில் ஆங்கில மொழியில் எழுதியுபகரித்த ஸ்ரீமான். நீலகண்ட சாஸ் திரியார்க்கும், தமிழ்மொழியில் சுருக்கம் சுருக்கமாகவேனும் வரைந்து தவிய அம்பா சமுத்திரம் தமிழ்ப்புலவர் அரிகர பாரதியார்க்கும், தமிழ் நாட்டுச்சரித்திரம் அறியும் ஆவலுடையோர் கடமைப்பட் டிருக்கின்றனர். இவ்வாறாகிய பல வகை உதவிகளைக் கொண்டு சங்க காலப் பாண்டியருள் ஓர் ஐவர் வரலாறுகளை விளக்கியுரைக்க இந்நூல் எழுந்தது. இந்நூலின் முதற் பகுதியில் மூவர் பாண்டியரைப் பற்றியும், இரண்டாம் பகுதியில் இருவர் பாண்டியரைப்பற்றியும் கூறப்படும். சங்கச் செய்யுட்களின் ஆதரவைக்கொண்டு அறியலாகும் வரலாறு களை இடையிடையே பொருத்தமான முறையில் அக் கால மக்கள் மனப்போக்குக்கும் வாழ்வின் நிலைக்கும் ஏற்ப விவரித்து, முன்னைய வரலாறுகளால் அறியலாகாத சில பாத்திரங்களையும் இடையிடைப் பெய்து, பழமையிற் புதுமை சில கலந்திருப்பினும் பழமைக்கு மாறுபடா வண்ணம் இயன்றவளவு அமைத்து, இந்நூற்பகுதிகள் எழுதப்பட்டுள. ‘இவ்வாறு எழுதப்படுவது உண்மை வரலாறு ஆகுமோ?’ என்ற கேள்வி எழலாம். உண்மை வரலாற்றின் சில பகுதிகளை நன்கு விளக்க உதவ வேண்டி அயற்பொருள்கள் இடையிடைப் பெய்யப் பட்டுள்ளனவே யொழிய, வேறு எவ்வகையிலும் சரித்திரப் போக்கினை மாற்றவோ மறைக்கவோ செய்யாமையாலும், பள்ளிக்கூட மாணாக்கர் உள்ளத்தினைக் கவர்ந்து அவர்கட்குப் பாண்டியர் ஐவர் வரலாற்றினை விளக்கும் அரும்பணி பூண்பதாலும், இஃது உண்மை வரலாற்றோடு பெரும்பாலும் ஒத்ததே. இவ்வைவரை வரிசைப்படுத்தியது கால வாராய்ச்சி செய்து உண்மை