பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பாண்டிய மன்னர்

வைணவவாதி:— ‘உலகமெல்லாம் நாராயணன் காவலுள் அடங்குவது.’

வேத வாதி:— ‘கற்பகம், கை; சந்தசு, கால்; சோதிடம், கண்; நிருத்தம், செவி; சிக்ஷை, மூக்கு; வியாகரணம், முகம்; இத்தகைய உருவம் உடைய அநாதியாய வேதமே தெய்வம்.’

சாங்கிய வாதி:—“யாகாதிகளைச் செய்வது ஸம்ஸார துக்கத்தை யொழிக்கக் காரணம் ஆகாது. துக்கம் நீங்கிச் சுகம் பெறும் வழி தத்துவ ஞானம் ஒன்றே. தத்துவங்கள் இருபத்தைந்து. மூலதத்வம் பிரகிருதி. பிரகிருதி நித்தியம், அதன்கண் முக்குணங்களும் ஒரு நிகராய் இருக்கும். பிரகிருதி ஒருவர் படைப்பன்று; அசேதனமாம், மற்றத் தத்துவங்கள் இதிலிருந்தே பிறந்தன, அவையும் அசேதனமே, இவையன்றி நித்தியமாகவும் சேதனமாகவும் செயலற்றதாகவும் உள்ள புருஷன் என்ற ஒரு தத்துவம் உண்டு. புருஷதத்துவம் எண்ணற்றது. எல்லாச் செயல்களும் பிரகிருதி சம்பந்தம் உடையவையேயன்றிப் புருஷ சம்பந்தம் உடையவையல்ல. கேவலம் சேதனமயமாய் உள்ளது ஆத்துமா. சுக துக்கங்களில் அதற்குச் சம்பந்தம் இல்லையாயினும், இருப்பது போலத் தோன்றுகிறது. இவ்வாறு சேதன ஸ்வரூபியான புருஷன், அசேதனப் பிரகிருதியைப் பற்றிக்கொண்டு, கர்ம பந்தத்தில் உழலும் நிலையிலிருந்து விலகுவதே மோக்ஷம். பிரகிருதியும் புருஷனும் ஈஸ்வர சிருஷ்டியல்ல வாகையால், பிரகிருதியி லிருந்து தோன்றிய உலகமும் உயிர்களும் ஈஸ்வர சிருஷ்டி யல்லவென்பதே சித்தாந்தம். ஈஸ்வரன் என்ற ஒன்று இருக்க இடமில்லை.”

யோகி:—“யோகம் எட்டு அங்கங்களை யுடையது. அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியா ஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பன. இவற்றை