உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

35

முறையறிந்து பயில்வதால், எட்டு வித விபூதிகளும் பலிக்கும். அவற்றால் மயங்காமல் மேல் நோக்கிச் சென்றால், ஸர்வ ஸங்க விமுக்தனாகி ஆத்ம ஸ்வாதந்தர்யம் கிடைக்கும். அதுவே மோக்ஷம்.”

நையாயிகர்:– ‘தர்க்க முறைகளைக் கொண்டு உண்மை யுணர்வதால் பல பொருள்களையுடைய உலகமும் ஜீவர்களும் படைக்கப்பட்டனவாகத் தோன்றும் என்றும், படைப்புக்குரிய கர்த்தா ஈஸ்வரன் என்றும், பரமாணுத் தொகுதியிலிருந்து உலகை அமைத்தலும் கர்மம் காரணமாக ஜீவர்களுக்குச் சரீரம் அளித்தலும் அவன் செயலாம் என்றும், சரீரமும் உலகமும் மூல பரமாணுக்கள் ஆகச் சிதறிவிடுதல் அழிவு என்றும், இவை தோன்றி மறையக் காரணமாய் உள்ள அணுக்களும் ஜீவ ராசிகளும் நித்தியமாம் என்றும் நாம் உணர்ந்திருக்கின்றோம்.’

வைசேடிகர்:-‘திரவியம், குணம், கர்மம், சாமான்யம், விசேஷம், சமவாயம் எனப் பதார்த்தங்கள் ஆறு, திரவியம் என்பன, குணமும் தொழிலும் உடையனவாய் எவ்வகைப் பொருளுக்கும் காரணமாய் உள்ள ஒன்பதாம். மண், நீர், தீ, வளி, ஆகாயம், திசை, காலம், ஆன்மா, மனம் என்பன அவை. இவற்றுள் மண் ஐந்து புலனுமுடையது. மற்றவை ஒவ்வொன்று குறைவாக உடையன. பொருளின் குணங்கள் பல வகையாம். பொருளும் குணமும் கருமத்தைச் செய்தற்கு உரிமையுடையன. பொருளின் பொதுத்தன்மை சாதலும வாழ்தலுமாம். பொருள் அணுக்களின் கூட்டம். அது குணியாம். மற்றவை எமக்கும் கையாயிகர்க்கும் பொதுவே.’

பூத வாதியர்:–“ஆத்திப் பூவும் கருப்புக் கட்டியும் கலந்து மேலும் கூட்டற்குரியவற்றைக் கூட்டினால், மதுவின் மதசக்தி தோன்றுவது போல, ஐந்து பூதங்களின் சேர்க்கை-