பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

47

பிடிக்கவெனப் பின் வரும் கருத்துக்களை அமைத்துளோம். நியாய பரிபாலன விஷயத்தில் துலைக் கோலின் முள்ளைப் போல ஒருபாற் கோடாது நடுவு நிலை கொள்க. அவ்வாறு கொள்வதாற் சிறப்புறுக எனவும் யமதருமனைப் போல நடுநிலை கடை பிடிக்கவெனவும் பொருள் செய்யுமாறு முதற்கண் அமைந்தது. அரிய அரண்கள் பலவற்றை அடக்கிக் கொண்டு அவற்றில் உள்ள அரும்பொருள்களை வறியோர்க்கு வழங்குக, புலவர்க்குப் பரிசிலாக அளிக்கவெனவும்; நினது குடை வேறெங்கும் பணிவில்லதாய் ஓங்கி யுயருமாயினும், முனிவரையும் சிவாலயங்களையும் வலம் வரும்போது பணிகவெனவும்; எவர்க்கும் வணங்காத நினது முடி நான்மறை ஓதிய அந்தணர் ஆசியோடு ஏந்திய கையின் எதிரே வணங்குக எனவும்; நினது மாலை வாடாத பெருமைத்தாயினும், பகைவர் நாடுசுடு புகையில் வாழுகவெனவும்; பகைவர்முன் அடங்காத கோபத்தையுடையாய் ஆயினும், நினது சினம் பெண்டிர் பிணக்கின் முன் மாறுகவெனவும்; பல வகை வெற்றிச் சிறப்பையும் கொண்ட வள்ளன்மை சிறந்த பாண்டிய மன்ன, நீ சூரிய சந்திரர்போல உலகில் வாழ்கவெனவும் வாழ்த்துக் கூறினேம்.

“ஒருபாற் கோடாத நடுவு நிலைமையைப் பற்றுவதாலே அரசர்க்கு எல்லா வாழ்வும் பெருகும்; படை, தடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறும் வளரும். அயல் நாடுகளை வெல்வதால் அடையும் பொருளைப் பரிசிலர்க்கு வழங்கும் முறையிலும் உரிய உபசாரங்களோடும் ஆதரவோடும் வழங்க வேண்டும். வரிசை தவறினாற் பெரிதும் வறுமையுடையாராயினும் பரிசில் பெறார். பரிசில் வாழ்நராகிய புலவர் புகழ்வது அரசர் வழி வழிச் சிறக்க வுதவும் சிறந்த வுதவியாம். ஆதலாலும், வரிசையறிதல் அரிது, ஈதல் எளிது என்பர் ஆதலாலும், வரிசைக்கு ஏற்ப ஈகை கடமையாக் கொள்க எனப்பட்-