உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

55

அறிதற் கரும்பொருளாகிய ஆத்மானந்தத்தை அறிவிப்பாரிடம் அறிய முயன்றேன் ; அனுபவத்தில் அப்பெரும்பேற்றை யடையவெண்ணியே இங்கு அடைந்தேன். இவ்விடத்தில் சாமானியர் கண்கட்குப் புலப்படாத பெரியார் பலர் வாழ்கின்றனர். இயற்கைச் செல்வியும் இங்கு அரசு புரிகின்றாள். இனி என் சிந்தை இன்றிருந்து நாளை யழியும் வாழ்வை நாடாது; கணத்திலே தோன்றி பழியும் இன்பத்தில் ஈடுபடாது; ஒருவகை நிலையுமற்ற செல்வத்தினைத் துய்ப்பதிற் செல்லாது; என்னால் இந்நிலையில் உனக்குக் கொடுக்கக் கூடிய வரம் ஒன்றும் இல்லை யென்பதை நீயே ஊகித் துணரலாம்.

மாறன்:— ஐய, உமது முன்னோர் தேடி வைத்த பெருஞ்செல்வத்தையும் நீவிர் அநேக ஆண்டுகளாய்த் தேடிய அரும்பெற லறிவையும் நீவிர் பிறந்த நாட்டுக் குப் பயன்படுமாறு உதவல் செயற்கருஞ்செயலோ ? நான் கேட்க எண்ணி வந்த வரம் இதுவே.

முனிவர்:—வாராணா - க்ஷேத்திரத்தில் விசுவநாதரைத் தரிசனம் செய்துகொண்டிருக்கையில் என் மனமார என் முன்னோர் தேடிவைத்த நிலம் பொன் முதலிய எல்லாப் பொருள்களையும் என் நாட்டுக்கென்றே அர்ப்பணம் செய்துவிட்டேன். என் பொருள் என் நாடு என்று கூற எனக்கு இனி ஒன்றும் இல்லை. ‘உலக முழுவதும் என் நாடே; உயிர்கள் எல்லாம் என் உயிரே’ என்ற உண்மையைப் பெரியோரால் நன்கு அறிந்துகொண்டேன். என்னுடைய அறிவு என்று சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை. இருப்பதாகப் பிறர் எண்ணுவது அழிவுள்ளது. அறிவு தன் உருவமாகக் கொண்ட பொருளை அறியும்