பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

புகழ்ந்தவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் சிறைப்பட்ட கோச் செரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை கபிலருக்கு நண்பனாவன். அவர் பதிற்றுப் பத்தில் ஏழாம் பத்தைச் சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன் மீது பாடினர். அவன் முன்னவனுக்கு என்ன முறையானோ! தலையாலங்கானத்துப் போரில் இறந்தசேரல் இவ்விருவர்க்கும் என்ன முறையானோ!

இவ்வாறு பல அரசர் பெயரும் முன்பின் அறியலாகா வண்ணம் பிணைந்து கிடக்கும் செய்யுட்களிலிருந்து உண்மை வரலாற்றை ஊகித்துணர்வது மிகவும் சிரம சாத்தியமே. உக்கிரப் பெருவழுதியும் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் இரு வேறு அரசர் அல்லர், ஒருவனே என்று துணிந்தாரும் உளர். சங்க நூற் குழப்பத்துக் கிடையில் அவர் துணிவுக்குக் கிடைத்த ஆதரவு என்னவோ என்பது அறியலாவதாயில்லை.

இந்நிலையில் இவ்வைவர் பாண்டியர் வரலாறுகளை அவ்வவரைப் புகழ்ந்து புலவர் பாடிய செய்யுட்களில் இருந்து தொகுத்து ஒன்றோடொன்று கலவா வண்ணம் எடுத்து எழுதுவது எளிதோ, பெருமுயற்சியால் இயல்வதோ என்பதை இச்செய்யுட்களை ஆராய்வதே பொழுது போக்காக உடைய அறிஞர் அறிவர். உண்மை வரலாற்றோடு வேறு சிலவற்றைக் கலந்து வைத்தது தொடர்ப்பட்ட சரித்திரமாக இவை தோன்றுவதற்கே யன்றி, வேறு கருத்தானன்று.

தமிழ்ப் பயிற்சி பெருக வேண்டும், பண்டை நூல்களில் உள்ளவற்றை ஆராயும் அறிவு வளர வேண்டும் என்று எங்கும் முழக்கமாய் இருக்கும் இந்நாளில்,