பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

ளிலே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் வென்று சிறைப்படுத்தப்பட்ட கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்ற சேரனால் போர் புரிந்து வெல்லப்பட்டிருக்கிறான். உக்கிரப் பெருவழுதியால் தொகுப்பிக்கப் பெற்ற அகநானூற்றில் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் வரலாறு தெரிவிக்கும் செய்யுட்கள் ஒன்பது உண்டு. உக்கிரப் பெருவழுதி காலத்தில் அரங்கேற்றப் பெற்ற திருக்குறளின் செய்யுட்கள் ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாற்றை விளக்கிய இளங்கோவடிகளாலும் மணிமேகலை யாசிரியர் சீத்தலைச் சாத்தனாராலும் ஆளப்பட்டுள்ளன. இவற்றால் உக்கிரப் பெருவழுதியென்பான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பிற்காலத்தவனா, ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு முற்காலத்தவனா என்பதும் விளங்கவில்லை. இறையனார் அகப்பொருள் உரை கேட்டவன் உக்கிரப் பெருவழுதியேயோ, வேறு பாண்டியனோ என்பதும் விளங்கவில்லை. நக்கீரர், புறநானூற்றிலே இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடியிருக்கிறார்; இறையனார் அகப் பொருளுக்குப் பொருள் உரைத்திருக்கிறார். உருத்திர சன்மன் அந்நாளில் ஐயாட்டைப் பிராயத்தானாய் இருந்தான் என்பது அவ்வுரையிற் காணும் செய்தியாம். அவனே அகநானூறு தொகுத்தான். இந்நக்கீரரே நெடுநல்வாடை பாடித் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் புகழ்ந்தவர். கூல வாணிகன் சாத்தனார் மணிமேகலை பாடிய காலத்திருந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைத் தவிரப் பாண்டியன் சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறனையும் பார்த்துப்-