உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

61


அரசன்‌:--புலவருக்கோ ? போர்‌ என்றால்‌ புலவர்‌ வெறுப்பரோ?

கக்கீரர்‌:--அரசே, அவ்வாறு புலவரை எண்ணலாமோ ? அறநெறி வழுவிய அரசரை அறநெறி நிறுத்‌தவும்‌, தம்‌ நாட்டின்‌ செல்வத்தை வளர்க்கவும்‌ அரசர்‌ போர்‌ செய்தல்‌ முறையேயன்றோ? இருந்ததைக்‌ கொண்டு அமைவது அரசர்க்கு ஏற்ற குணமென அறநூல்கள்‌ கூறவில்லையே !

அரசன்‌:--இவ்வாறு எல்லார்க்கும்‌ சம்மதமாயிருப்‌பதால்‌ யாம்‌ தமிழ்‌ நாடு முழுவதையும்‌ நம்‌ ஆளுகைக்‌குள்ளடக்கப்‌ போர்புரியத்‌ துணிந்தோம்‌. அதற்கு நீவிர்‌ அனைவீரும்‌.இயன்ற வுதவி புரிவீராக.

நக்கீரர்‌ :--எம்மால்‌ இயன்ற வுதவியை இப்பொழுதே யாம்‌ செய்இன்றோம்‌, அரசே, அனேற்றை வெற்றிக்‌கறிகுறியாகக்‌ கொடியெனப்‌ பிடித்த நெருப்‌புப்போல்‌ நிறம்‌உள்ள சடையினையுடைய விலக்கற்கரிய- மழுப்‌ படையைத்‌ தாங்க நீல கண்டனும்‌, கடலில்‌ வளர்கின்ற வலம்புரி சங்கம்போன்ற மேனியையுடைய வலிமை மிக்க கொடிய கலப்பைப்‌ படையும்‌ பனைக்‌கொடியும்‌ உடைய பலராமனும்‌, கழுவிய அழகிய நீல மணி போன்ற மேனியையுடைய விண்ணில்‌ உயர்ந்துbபறக்கும்‌ கருடக்கொடியினையுடைய வலிமை மிக்க திருமாலும்‌, மயிற்கொடியையெடுத்த மாறாத வெற்றியையுடைய ௮ம்மயிலாகிய வாகனத்தையுடைய செவ்வேளாககிய முருகனும்‌ என்ற உலகங்‌ காக்கும்‌ வலிமை சிறந்த நால்வருள்ளும்‌, மாற்றலரிய சினத்தால்‌ நீ சிவபிரானைநிகர்ப்பாய்‌; வலிமையால்‌ பலராமனை நிகர்ப்பாய்‌; புகழால்‌ இகழ்வாசை ௮டும்‌ திருமாலை நிகர்ப்பாய்‌ ; நினைத்ததை முடிப்பதால்‌ முருகனை நிகர்ப்பாய்‌; அவ்வாறு அந்நால்‌;