பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பாண்டிய மன்னர்


நலம்‌. மாளிகையை என் செய்யலாம்‌ என்று நாம் யோசனை செய்திருந்தபோது புலவர்கூறியது பொருத்தமாயமைந்‌தது. அவ்வாறே முடிவு செய்து விடுவோம்‌.

அமைச்சர்‌ :--அவ்வாறே ஆகுக, இன்றே இதற்கு அமைந்த அரசு விளம்பரங்களை நாடெக்கும்‌ பரப்புவிக்க வேண்டுவன செய்கின்றேன்‌.

அரசன்‌:--இஃது இவ்வாறிருக்க. தண்டத்‌ தலைவரே உமக்கு யாம்‌ கொடுத்த பணி என்ன ஆயிற்று ?

தண்டத்‌ தலைவர்‌:--மன்னர்‌ மன்னரே, நம்‌ படை நாம்‌ எதிர்‌ பார்த்த ௮ளவுக்குமேல்‌ மும்மடங்கு வளர்ந்‌துவிட்டது. நம்‌ நாட்டில்‌ உள்ள அண்‌ மக்களிற்‌ பெரும்பாலார்‌ படைப்பயிற்சி உடையராயினர்‌. இதனால்‌, நாட்டுக்‌ காவற்குவேண்டுமளவு நிலைப்படையிருப்பதோடு அயல்‌ நாடுகள்மேற்‌ சென்‌று போர்‌ இயற்றவும்‌ போதுமான வீரரும்‌ படைக்கலங்களும்‌ பரிகளும்‌ தேர்‌களும்‌ களிறுகளும்‌ பிறவும்‌ நம்மிடம்‌ உள்ளன. நாளைக்கே வேண்டுமாயினும்‌,; அயல்‌ மன்னரை அடக்‌கப்‌ புறப்படலாம்‌.

அரசன்‌:--அவ்வாராயின்‌, சோழர்‌ சேரர்‌ முதலிய அரசர்களை முதற்கண்‌ எதிர்த்‌துப்‌ போராடித்‌ தமிழ்‌நாடு முழுவதையும்‌ நமது ஆட்சிக்குள்‌ ௮மைப்போம்‌. குறுநில மன்னர்‌ இச்செய்திகளைக்‌ கேட்டால்‌, தாமே அடங்குவர்‌.

தண்டத்‌ தலைவர்‌:-அவ்வாறே செய்யலாம்‌.

அரசன்‌:--அமைச்சரே, இது அமக்கும்‌ சம்மதந்‌தானே!

அமைச்சர்‌.--இந்நாட்டில்‌ உள்ளார் அனைவருக்கும்‌ சம்மதமே.