பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

59

வரும் குடியிலே பிறந்த குணசாகரனார் அப்பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு நாம் வேண்டியும் மறுத்தார். அவர் தவச் செல்வத்தையே நாடி நின்றார். அவரது அருளும் அன்பும் நமக்குக் கிடைத்தன. அன்றியும், அவரது குலதனமாகிய பெருஞ்செல்வம் நம் நாட்டுக்குப் பொதுப்பொருளாயிற்று. அவரது பெரிய மாளிகையும் அரசாங்கத்திற் குரியதாயிற்று.

அமைச்சர்:— இவ்வாறு நேர்ந்தது கருதி மகிழ்வதோ, வருந்துவதோ என்பது தோன்றவில்லை. அறிவு விளக்கப் பெருங்கடலாகிய அமைச்சரை யிழந்தது இந் நாட்டுக்குப் பெருத்த நஷ்டமே. ஆயினும், அவரையே ஒரு பெருமுனிவராகப் பெறுவது உலகத்துக்கே பெருத்த லாபமாகும். அவரது பரம்பரைச் செல்வம் நல்வகையில் விநியோகிக்கப்படுதல் நலம்.

அரசன்:— அதற்கும் நாம் ஒரு யோசனை செய்து முடிக்கலாம். கல்விப் பெருஞ்செல்வர் குடியாகிய குணசாகார் குடிப்பொருள் கல்விப் பொருளை வளர்க்க வுதவுவது சிறப்பன்றோ ? நமது அவைக்களப் புலவராகிய நக்கீரனார் கருத்தென்ன ?

நக்கீரர்:— அரசரேறே, புரவலர்க்குக் கருத்து எதுவோ அதுவே புலவர்க்கும் கருத்தாம். குணசாகரர் குடிப்பொருளைத் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குக் கொடுப்பதோடு அவரது மாளிகையைப் பெரியதொரு தமிழ்க் கல்விச்சாலையாக்கி, நூற்றுக்கணக்கான இளஞ்சிறார்களை உண்டியும் உடையும் நல்கிக் கல்வி கற்கச் செய்தல் சிறப்பாம்.

அரசன்:— நக்கீரனார் கூறியது நல்ல யோசனையே. அப்பொருளில் ஒரு சிறிதும் அரசாங்கத்துக்கு வேண்டா. எல்லாம் அறமுறைக் கல்வி வளர்த்தற்கே ஆதல்