பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்
67
யடைந்து, "இறைவன் திருவருள் என்ன ஆகுமோ! நாளைக்கும் முயன்று பார்ப்போம்!" என்று பேசிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இவ்வாறு இருக்கையில், பாண்டியர் படையிலிருந்து ஒரு தூதன் சேர சோழர் பாசறைக்கு வந்தான். அவன் தனது அரசர் ஆணையென்று பின் வரும் செய்தியைக் கூறினன்:
"மாட்சி மிக்க மன்னர்காள், நாம் முதற்கண் அமைதியை நாடினாம். நீவிர் போர்க்குத் துணிந்தீர். எத்துணைப் படை வீரர்களை இழந்தீர்! எத்துணை வீரர் குடிகளை ஆண் மக்கள் அற்றவையாய்ச் செய்தீர்! நுமது மனவுறுதியால் வந்த ஊதியம் என்ன? ஓர் ஆண் மகன் உள்ள வளவும் போராடுவோம் என்றீர்! இன்னும் அத்துணிவு உம் உள்ளத்தில் உள்ளதா? இந்த ஒரு வார காலம் போர் செய்ததால் நீவிர் அறிந்த உண்மை யென்ன? இன்னும் எத்தனை மாதங்களாயினும் யாம் போரியற்றத் துணிந்திருக்கிறோம். ஆயினும், வீணாக நும் இருவருடைய பிடிவாதத்தால் அநேக ஆயிரவுயிர்கள் அழிவது எமக்குத் திருப்தி யளிக்கவில்லை. இப்பொழுதும் நும்மிருவர்க்கும் மரியாதையான நிலைமை தருகின்றோம். இன்று எம்மை வணங்கி எமக்குக் கீழ் அடங்குவதால் உமக்கு வரும் இழிவென்னை? தமிழ்நாடு முழுமைக்கும் ஒரு பேராசன் இருந்து அரசாள்வது பல சிற்றரசர் தனித்தனி சிறு சிறு நாடுகளை ஆள்வதைக்காட்டிலும் சிறப்பன்றோ? அயல் நாட்டவர் நம்மை எதிர்க்க வருவராயின், நாம் ஒரு நாட்டவராய் இருப்பதை அறிய நேரிடுமன்றோ? நாம் ஓர் அரசும் ஒரு நாடுமாய் இருப்பதால் வட நாட்டிலிருக்கும் பிற அரசுகளையும் வென்று அடக்கல் எளிதாமன்றோ? நம் முன்னோர் எம் முன்னோர்க்குக் கீழே அடங்கியிருந்தவரலாறுகளும் உண்டு என்பது நீவிர்