உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

73

 குளிர்ந்த பெருங்குணமும் மேகம் போன்ற வண்மையும் என்ற மூன்று குணங்களையும் உடையவனாக இல்லாதவர் இல்லையாம் படி நெடுந்தகாய் , ஆழ் நீர்க்கடலின்கண் வெண்மை நுரைத் தலையுடைய அலைகள் மோதும் திருச்செந்தில் நகரின் முருகவேள் திருக்கோயிற் றுறையில் பெருங்காற்றாற் றிரண்டு குவிந்த அநேகம் வடுக்களையுடைய மணல் மேட்டிலுள்ள மணலைக்காட்டிலும் பல காலம் வாழ்வாயாக.


"அரசே, சிவபிரானுக்குள்ள மூன்று கண்களில், மேம்பட்டது சிறந்தது என்ற கருத்தாலன்றே சந்திரன் சூரியன் என்ற மற்ற இரண்டும் இடக்கண் வலக்கண்ணாய்க் கீழிருக்கக் கனற்கண் நெற்றியில் நிலைபெற்றது. அதுபோல, சேர சோழர் வணங்கத் தக்க மேம்பாடு பெற்ற நீ, உலகம் தொழத் தக்க பெருமை பெற்றனை யன்றோ? படைப் பெருக்காற் பிறரை வென்று உயர்நிலை யடைந்தனையாயினும், அயல் நாட்டவரையும் நினது ஆளுகைக்குள் அடக்கியிருக்கும் இக்காலத்தில், நமர் பிறர் என்று அற நெறிக்கு மாறாக ஆதரிப்பதும் ஒறுப்பதும் செய்வாயாயின், அரசினும் பெரிதாகிய அறத்தெய்வம் தினக்குப்பகையாம். ஆகையால் அறநெறியைக் கடைப்பிடித்து நாற்படை வலியைக்காட்டிலும் அதுவே அரசுக்குச் சிறந்த வலியெனக் கருதி நின்கீழ் வாழும் எவரும் நின்னைத் தாயும் தந்தையும் என மதிக்கத் தக்கவாறு அரசியற்றுவாயாக. அரசற்கு ஆண்மை எவ்வளவு சிறந்ததோ, அவ்வளவிற் சிறிதும் குறையாது கருணையும் வண்மையும் வேண்டப்படுவனவே. ஆகையால், யாம் நின்னை எல்லா நற்குணங்களும் நிரம்பி நாடனைத்துக்கும நலம் புரிந்து வாழ்கவென வாழ்த்தினாம்."

நக்கீரர்:-- ஐய, அன்பரே, இவ்வாழ்த்தைச் செய்யுளாய்ச் செய்திடின், தேயம் எங்கெங்கும் உள்ள அரசர்க்கும் ஓர் அறவுரையாய் அறிவுரையுமாய் இலங்குமே!