பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

85

யத்திற் கயல் பொறித்த பிறகே இம்முயற்சியை நிறை வேற்றிவிட்டதாய் எண்ணக் கூடும். அதுவரையில் முன் வைத்த காலைப் பின் வைக்க லாகாது.

நக்கீரர்:- அரசே, இவ்வாறெல்லாம் சிந்திப்பதால் இனி வரும் புலவர்கள் பரிசில் பெறாது திரும்ப நேரிடுமோ என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

மருதனிள நாகனார்:- நாமும் அவ்வாறே எண்ணுகிறோம். ஏனெனில், எல்லார் உள்ளமும் போர்க்குத் திரும்பிவிடின், இயற்புலவரை ஏன் என்று திரும்பிப் பார்க்க எவருக்கும் அவகாசம் இராதன்றோ? அரசர்க்கு அவகாசம் இராதபோது வாயில் காவலர் புலவர் உள்ளே வர எளிதில் விடார்.

நன்மாறன் :- அவ்வாறெல்லாம் ஆகாதிருக்கவே இறைவனை யான் வேண்டுகின்றேன். எல்லாம் இறைவன் செயல். இனி இச்சபை கலையலாம்.