உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV

றிவிற் சிறந்த அமைச்சரும், தண்டத்தலைவரும், மாசனத்தாரும் பிறரும் அவ்வவ்வமயங்களிற் கூறும் அறைவுரைகளைச் செவியேற்று அரசு புரிந்து வந்த பாண்டியன் நன்மாறன், நல்லோர்க்கு நாயகனாய், அல்லோர்க்கு அற மகனாய் அநேக ஆண்டுகள் தமிழ்நாட்டுக் குத்தலைமை பூண்டிருந்தான்; ஆண்டில் மூத்தானாயினும், அறிவிலும் ஆண்மையிலும் சிறிதும் தளர்ச்சி யெய்தினானில்லை. போர் என்றால் விரைந்து முன் சென்று ஆவன செய்யும் தன்மை இளமைப் பருவத்தில் இருந்தது போலவே இப்பொழுதும் இருந்தது. வயதேறவேற ஒரு மாறுபாடு விளங்கலாயிற்று: புலவருடன் பயிலும் பழக்கம் அதிகமாயிருந்தது மாறிச் சிறிது சிறிதாய்க் குறைந்துகொண்டே வந்து, இக்காலத்தில் அநேகமாய் இல்லையென்று சொல்லும் நிலைக்கே வந்துவிட்டது. எப்பொழுதும் தூதரோடும் அமைச்சரோடும் தண்டத் தலைவரோடும் இருந்து மந்திராலோசனை செய்வதே பொழுது போக்காயிற்று. இடையிடையே அவகாசம் கிடைத்தால், அயல் நாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் வரும் ஒற்றர்கள் கொணரும் செய்தியைக் கேட்டு, அவர்கட்கு வேண்டும் ஆணை பிறப்பித்து, அவரவர்க்கு அமைந்த இடங்கட்கும் வினைகட்கும் அனுப்புவதில் அச்சிறு பொழுதும் கழிவதாயிற்று. இந்நிலையில் வாழ-