உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பாண்டிய மன்னர்

இருந்தனர். தமிழ் நாடெங்கும் புகழ் பெற்ற பெரும்புல வராகையால், ஒரு வேளை அவரை யேற்று உப்சரித்து அனுப்பும் எண்ணம் அரசனுக்குத் தோன்றினும் தோன்றலாம் என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் உதித்தது. அதனால், மதுரைப் புலவர் எல்லாரும் ஆவூர் மூலங்கிழார்க்கு உரிய மரியாதைகள் செய்து, அரண்மனைக்கனுப்பினர்.

சோணாட்டுப் பூஞ்சாற்றார்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப் பாடிய பார்ப்பன வாகைச் செய்யுளால் தமது புகழை வளர்த்துக்கொண்ட ஆவூர் மூலங்கிழார், மதுரை யரண்மனை யடைந்தனர் வாயிற் காவலர் அவரது முகப்பொலிவால் அவர் பெரும்புலவராகவே யிருக்கவேண்டும் என அறிந்தனர். ஆயினும், முன் போலத் தடையின்றிப் புலவர்களை அரண்மனைக்குட் புகவிட அனுமதி பெறாதிருந்தனராதலால், இன்னது செய்வதென அறியாது சிறிதுநேரம் தயங்கிப் புலவரை இரண்டாவது வாயில்வரையிற் செலவிட்டு, அரசன் கருத்தையறிய ஒரு காவலன் முன்னே விரைந்து சென்றான். நன்மாறன் அமைச்சரோடும் தண்டத் தலைவரோடும் முன்னாள் ஆலோசனை செய்த பெரியதோர் அரசியல் வினையைப்பற்றித் தனித்துச் சிந்தனை செய்து கொண்டிருந்தான்; வாயிற் காவலன் வந்து சொல்லிய செய்தியைக் கேட்டான்; புலவரை வரவேற்கும் வழக்கத்தை யொழித்து அநேக ஆண்டுகள் ஆயின வாயினும், ஆவூர் மூலங்கிழார் என்றபெயரைக் கேட்டதும் அவரை எவ்வண்ணம் வரவேற்காது அனுப்புவது என்ற எண்ணம் தோன்ற, அரசியல் சம்பந்தமாக எண்ணியிருந்த