பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


சைகை முறைகள், மற்றும் வீதியின் அடையாள முறைக் குறிப்புக்கள், சாலைக் குறிப்புகள் இவற்றையும் அனுசரித்துதான். செல்ல வேண்டும்.

(3) அதிகக் கூட்டமில்லாத பகுதியிலிருக்கும் பாதை வழியே போவதுதான் நல்லது. வேறு வழியில்லாது போனால், கூட்டத்தில்தான் செல்லவேண்டும் என்றிருந்தால், மிகவும் எச்சரிக்கையுடன் தான் செல்ல வேண்டும்.

(4) 'நடந்து செல்வதற்குரிய பாதை' என்று அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதையைத்தான் பயன்படுத்தவேண்டும்.

(5) எப்பொழுதும் இடது கைப் பக்கம் உள்ள நடைபாதை முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லதாகும்.

(6) பாதையை நேரே பார்த்துப்போகாமல், சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்து, தன்னை மறந்த நிலையில் நடப்பது கூடாது. அவ்வாறு வேடிக்கை பார்க்க வேண்டும் என்றால், ஓரிடத்தில் ஒதுங்கி நின்று, பார்க்க வேண்டியதைப் பார்த்துவிட்டு, பிறகு நடப்பதுதான் நல்லது.

இல்லையேல், எதிரில் வரும் ஆள் அல்லது வாகனங்கள் மீது மோதிக்கொள்ள நேரிடும். சமயத்தில், நடக்கும் பாதை நடுவே உள்ள பள்ளங்களில் கால் இடறி விழுந்து, கைகால்கள் பிசகிக்கொள்ளவோ அல்லது எலும்பு முறிவுவோ ஏற்படக்கூடும்.

(7) பின்புறம் அடிக்கடித் திரும்பிப் பார்த்துச்