பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாதுகாப்புக் கல்வி

29


செல்கின்ற பழக்கம் தவறான பழக்கமாகும். எக்காரணத்தை முன்னிட்டும், நடை பாதையை விட்டு, கிழே இறங்கி, சாலையிலே நடக்கக்கூடாது.

(8) மழை காலம், மற்றும் பனி, குளிர்காலம் போன்ற நாட்களில், சலைகளில் மிகவும் எச்சரிக்கையாக நடக்க வேண்டும்.

(9) குடைபிடித்துக்கொண்டு போக நேர்ந்தால் தனது பார்வையை மறைக்கும்படி முன்புறமாகச் சாய்த்துக் கொண்டு போகாதவாறு, பிடித்துக்கொண்டு போக வேண்டும்.

(10) அவசரமாகப் போகும் பொழுதோ, அல்லது ஏதாவது ஒரு தலைச் சுமையுடன் அல்லது பாரத்துடன் தூக்கிக்கொண்டு நடக்கும்பொழுதோ, அல்லது உடல் நலமில்லாமல் இருக்கும் பொழுதோ அல்லது மனம் குழம்பித் தடுமாறிய நிலையில் இருக்கும்பொழுதோ, சாலையில் வெகு கவனமாக நடக்க வேண்டும்.

(11) ஓடுகின்ற கார்களை அல்லது வேறு வாகனங்களைத் தொட முயற்சிக்கக்கூடாது.

(12) எதிரே வந்துகொண்டிருக்கும் வாகனம் வருவதற்கு முன்னே, தான் போய்விடலாம் என்று எப்பொழுதும் முயலவே கூடாது. வாகனத்தின் வேகம் வேறு. மனிதர் நடக்கும் வேகம் வேறு. அதனால், வாகனத்துடன் போட்டி போடக்கூடாது. வாகனத்தைப் போகவிட்ட பிறகு கடப்பதுதான் மிகவும் பத்திரமான