பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்புக் கல்வி

47


2. தோல் சிவந்து கொப்பளமாகி விடும் காயம்.

3. தோல் வெந்து, பாதிக்கப்பட்டு, உள் தசையும் புண்ணாகிவிடும் காயம்.

தோலைப் பாதிக்காத காயம், தோல் சிவந்து கொப்பளமாகும் காயங்களைப் பற்றி அதிக வேதனையோ விசாரமோ படவேண்டாம்.

ஆனால், மூன்றாவது வகையான தீக்காயம், பெரும் புண்ணாகிப் போவதுடன், ஆட்பட்டவருக்கு அதிர்ச்சி தந்து, சிறுநீர்ப்பை, நுரையீரலைத் தாக்குவதுடன் இரத்த ஒட்டத்தையும் தாக்கி விடுகிறது.

அதனால், முதலில் விபத்துக்குள்ளானவரின் அதிர்ச்சியை போக்கவேண்டும். காயம்பட்டவர்களை மெதுவாகப் படுக்க வைத்து, அவரது துணிகளை பொறுமையாக, அவசரமின்றி அப்புறப்படுத்த வேண்டும்.

துணிகள் நைந்து காயத்துடன் ஒட்டியிருந்தால், துணிகளைப் பிய்த்து எறியக்கூடாது. சுற்றிலும் உள்ள துணிகள் மற்றும் தோலைப் பாதிக்காத முறையில் கத்தரிக்கோலால் வெட்டி எடுக்க வேண்டும்.

அப்பொழுது முதலுதவி என்று பஞ்சுடன் சேர்த்து மருந்து போடக்கூடாது. ஏனென்றால், பஞ்சும் புண்ணுடன் ஒட்டிக் கொள்ள நேரிடும். ஆகவே, 'ஆயின் மென்ட்' இருந்தால் தடவி விடலாம்.

தடவி விடுபவர் கை, நகம் மற்றும் பகுதிகள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால்