பக்கம்:பாதுகாப்புக் கல்வி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



48.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


தீப்புண்கள் வழியாக நச்சுக் கிருமிகள் உடல் உள்ளே புகுந்துவிடும் வாய்ப்புண்டு.

இதற்கு இடையில், டாக்டரை வருவித்திட ஏற்பாடு செய்து விடவேண்டும். இத்தகைய கொடுமை வாய்ந்த தீயின் வாய்படாமல், வீட்டில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக வேலை செய்ய வேண்டும்.

தீக்காயம் போலவே, வெட்டுக் காயங்களும் நேரவாய்ப்புண்டு.

1. காய்கறி நறுக்கும்போது கைகளை வெட்டிக் கொள்ளுதல்.

2. காய்கறி வெடடிய அரிவாள்மனையை அப்படியே நிமிர்த்திவைத்து விட்டு அப்புறம் போகும்போது, வீட்டிற்குள் வருபவர் அதனை அறியாது அதன்மேல் இடறிவிழுந்து வெட்டிக் கொள்ளுதல்.

3. கூரிய கத்திகள், இரும்புப் பகுதிகள் முதலியவற்றை வரும் வழியில் அல்லது கண்ட இடங்களில் போட்டு விடுதல்.

4. வயல் மற்றும் மரவேலை செய்பவர்கள் தங்களது மண்வெட்டி, கடப்பாரை, ரம்பம், உளி போன்றவற்றை பாதுகாப்பில்லாத இடங்களில் போட்டு வைக்கும்போது, விளையாடும் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் அவைகளினால் காயம் அடைய வழிகள் உண்டு.

ஆகவே, காயம் ஏற்படுத்தக் கூடியனவற்றை, ஒழுங்குபடுத்தி, ஒதுக்குப் புறமாக வைக்க வேண்டும்.