பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகமும் ஆண்டவனும் 2? அன்னையெனப் புத்தி சொல்லி அனுப்பிய தன்னுடைய முதலாளியின் மனைவியின் அன்பை அவன் மறந்துவிடாமல், முத்துமாரி செட்டித்தெருவின் அமைதியைக் கடந்தான். மண்ணடி கடைத்தெரு. அப்பப்பா! என்ன நெரிசல்! பொங்கல் சந்தடி இன்னுமா அடங்காது? பாபு கண்களை விழிப்பூட்டிக்கொண்டு நடந்துகொண் டிருந்தான். வழியில் காப்பி ஹோட்டல் குறுக்கிட்டது. ஒரக் கண்ணால் பார்வையிட்டான். ஒரத்தில் சிலர் அமர்ந்து காப்பி குடித்துக்கொண்டிருந்தார்கள். உடனே அவனுக்குக் காப்பி நினைவு மீண்டது. கடவுளே! இன்னிக்கு நல்ல பொழுதாத் தான் விடிஞ்சிருக்குது. அம்மா எனக்கு அனுமதிச்ச அந்த ஸ்பெஷல் காப்பியும் கிடைக்கல்லே. வழக்கமா காசி கொடுக்க வேண்டிய சாதா காப்பியும் ஒட்டலே !...” என்று எண்ணமிட்டான்; தனக்குத்தானே வருந்தவும் செய்தான். காலையிலே பாபுவுக்கும் ஒரு காப்பி கொடுக்கும் படி ஆணை இட்டிருந்தார்கள் முதலாளியும் அவர் சம்சாரமும்! காசி இப்படி ஏமாற்றிவிட்டாரே! இந்த நடப்பை முதலாளி யிடமாவது, அவரது மனைவியிடத்திலாவது சொல்லிவிட வேண்டும். அப்போதுதான். திரும்பவும் இம்மாதிரித் தவறு ஏற்படாமல் இருக்கும். காசி அண்ணனையும் கண்டிப்பார்கள். பாபுவுக்கும் சீராகவும் ஒழுங்காகவும் காப்பி கிடைக்கும். இங்கே வேலைக்கு வந்ததிலிருந்து இந்த அறுபது. அறுபத்தைந்து நாள்களிலே காசி அவனை இப்படி எய்த்தது இல்லை! - - கார்ச்சத்தம் ஒன்று கேட்டது. பாபு விசையுடன் திரும்பினான். பயம் மூண்டது. முதலாளியின் காரோ என்று எதிர்பார் த்தான். இல்லை. வேறு யாருடைய வண்டியோ தெரியவில்லை. தான் எடுத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கையை மனத்தில் திடப்படுத்திக் கொண்டு, மார்க்கெட்டைக் குறி வைத்து வேகமாக நடந்தான்