பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாபுஜியின் பாபு வழியில் அங்கங்கே கும்பல் கும்பலாக ஜனங்கள் நின்று கொண்டிருந்தார்கள். பாபு விவரம் அறிந்தான். தமிழக அரசின் பரிசுச் சீட்டுகளுக்காகத்தான் இத்தனை நெரிசல்! § முடிவு தேதி இருக்கின்றன. காசியும் அவரைச் சார்ந்த தொழிலாளர் குழாமும் கூடிப் பேசிய பேச்சின் நிலவரத்தையும் பாபு மறந்துவிடவில்லை. அதே தருணத்தில், காசி தனக்குக் காப்பி கொடுக்கத் தவறியதையும், அதன் நிமித்தம் தான் நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடிவு செய்ததையும் அவன் மறந்துவிட மாட்டான்!... க்கு இன்னும் நாலைந்து தினங்களே பாக்கி மார்க்கெட் வாசலில் எதோ சண்டை. - டி கடை முதலாளி அவரது சிப்பந்தியை அறைந்து விட்டாராம். காரணம், அவரை அவரது வேலையாள் திட்டி யிருக்கிறான்! அதனால் அந்த வேலையாளை வேலையைவிட்டு நீக்கியும் விட்டிருக்கிறார் கடையின் உரிமையாளர். யாரோ ஒருவர் அவரிடம் அந்த வேலைக்காரனை மன்னித்து மறுபடி யும் அவனை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டிக் கெர்ண்டிருந்தார். கடைக்காரர் மசியவில்லை. இன்னொருவர் குறுக்கிட்டார். ஐயா... மன்னிச்சிடுங்க அந்த ஆளை. மன்னிக்கிறது என்கிறது மனுஷ்னோட உயர்ந்த பண்பு - அப்படின்னு காந்தி மகாத்மாவே சொல்லியிருக்காரே!” என்று பேசினார். - - அந்தப் புதிய மனிதரின் பேச்சைக் கேட்டதும், டி கடை யின் சொந்தக்காரர் சற்றே சிந்தனை வசப்பட்டார். சரி, போய் வேலையைப் பாருடா நாயர், சாயபு, ஜோசப் இவங் களுக்குப் படிஞ்சு நட, சாமான் சட்டுகளை விரயப்படுத் தாதே' என்றார். - இந்நிகழ்ச்சி பாபுவின் பிஞ்சு உள்ளத்திலே தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியிருக்க வேண்டும். மார்க்கெட்டின் உள்ளே நடந்தான். கொத்தமல்லித்தழைக் கடை காணப்