பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகமும் ஆண்டவனும் 23 பட்டது. உள்ளங்கையைத் திறந்தால், ஐம்பது காசைக் காணோம்! தி.கீரென்றது. பதற்றத்துடன் காலடியில் பார்த் தான். ஐம்பது காசு காணப்பட்டது. குனிந்து எடுத்தான். டோய், யாரோட காசுடா அது திருடுயோடா' என்று கிழம் ஒன்று இரைச்சல் போட்டது. பாபு சினம் அடைந்தான். என் காசு ஐயா இது. எங்க எஜமானி அம்மா மல்லித்தளைக்காகத் தந்ததாக்கும். தவறி விழுந் திடுச்சு. எடுக்கிறேனாக்கும். எங்கக் காசை எடுக்காம, விட்டுடச் சொல்றீயாய்யா?” என்று பதிலுக்கு இரைச்சல் போட்டான். கிழவர் ஒடுங்கிப் போய்விட்டார். மல்லித்தழைக் கட்டுடன் பாபு பங்களாவை இலக்காக்கி விரைவுடன் நடந்தான். "மன்னிக்கிறது ரொம்ப உயர்ந்ததாம். மன்னிக்கிறதின்னா, நமக்கு ஒருவர் ஒரு கெடுதியைச் செஞ்சாக்க, நாம அதை நினைச்சு அவருக்கு ஒரு பதில் கெடுதியைச் செய்யாமல், அவரை மன்னிக்கிற சுபாவந்தான் ரொம்பவும் ஒசத்தியாம்!... பெருக்கிப்பார்த்தா, இதுதான் அர்த்தம். காந்தி மகாத்மான்னா, காந்தி மகாத்மாவேதான்! நடத்து காட்டினவர் : வழிகாட்டு கிறார். நான் சின்னவன். என்னமோ என் மூளையைக் கொண்டு புரிஞ்சுக்கப் பாடுபடுறேன்!...' என்று தன்னுள்ளே சிந்தித்துக்கொண்டே நடந்தான். அவனது இளைய உள்ளத்திலே காசி விசுவ ரூபம் எடுத்திருந்தார்! முத்துமாரி செட்டித்தெரு முனையில் மடங்கிய வேளை யிலே பாபு ஒர் அதிசயக் காட்சியைத் தரிசித்தான் ! பாபுவின் முதலாளி திருவாளர் ஆனந்தரங்கம் அவர்கள் விரைவுடன் நடந்து போய்க்கொண்டிருந்தார் ! . . . பெரிய வண்டியிலே வெளியிலே புறப்பட்ட ஐயா, ஏன் இப்போ நடந்து போய்க்கிட்டு இருக்காங்க?' பாபுவுக்குத் தலைவலி வந்துவிட்டது. அவன் சற்றே பின் தங்கிவிடவும் துணிந்தான் ! 'உலகம் ஆண்டவனின் திருவிளையாடல் கூடம்! காந்தித் தெய்வத்தின் வாக்கன்றோ இது !