பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - 4 தியாகம் 'அடடே, மறந்தே போச்சே!” என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே, பாபு தன்னுடைய கிழிசல் கால்சட்டைப் பையிலிருந்த அந்த ஒரு கரும்புத்துணுக்கை வெளியில் எடுத்தான். தமிழ் அன்னை பங்களாவின் தலைவி கொடுத்த பொங்கல் அன்பளிப்பு அது. அவனுக்குக் கிடைத்த பங்கு இரண்டு கணுக்கள். அவற்றில் இந்தச் சிறிய துண்டுதான் மிச்சம். அதை ஊதிவிட்டு, வாயில் போட்டுச் சுவைத்தான். ஏற்கெனவே ஊறியிருந்த எச்சிலுடன் கரும்புச்சாறும் சேர்ந்: தது. நாக்கில் பரவியிருந்த இனிப்பு அவனது உடம்பு முழு வதிலும் பரவியது போன்று எண்ணிக்கொண்டான். ஒதுக்க மாக வைக்கப்பட்டிருந்த சிமெண்டுத்தொட்டியில் சக்கையைத் துப்பினான் ; திரும்பினான். அப்போது, காசியிள் தலை தெரிந்தது. காசி அண்ணன் எனக்குக் காப்பி தராம்லிருந்ததைப்பத்தி அம்மா கையிலே சொல்லாமல் விட்டது எவ்வளவோ நல்லதாய்ப் போச்சு. நான் புகார் சொல்லியிருந்தால், பாவம், காசி அண்ணன்பேரிலே அம்மாவுக்குத் தப்பான அபிப்பிராயம் விழுந்திருக்கும். அம்மா உடனுக்குடன் எதையும் விசாரித்து முடிவு சொல்லுறவங்க; ஜயா மாதிரி இல்லை... நான் போன வருஷம் மயிலாப்பூரிலே அலுவல் செஞ்ச வீட்டுக்கார அம்மா மாதிரிதான் இந்த எசமானியும் தங்கம். மன்னிக்கிறது ரொம்ப ரொம்ப உயர்ந் தது! அப்படின்னு பாபுஜி-மகாத்மா... சொல்லியிருக்காங்க. நான்காசி அண்ணனை மன்னிச்சிட்டேன். மன்னிக்கிறது எவ் வ சுலபமாகப் போயிட்டுது என் வரைக்கும்! ஆனா, காந்தி மகாத்மா இதைப்பத்தி ஒரு பேச்சு சொல்லியிருக்கிற, தனாலே, உலகத்திலே மன்னிக்கிற புத்தியானது குறைச்சல் ான்னோடப் புத்திக்குத் தோணுது. மகாத்மா