பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 uriisgustsir umų அநாதை-ஏழை என்ற உண்மைதான் அவனை வரவேற்றது. அவன் எதை மறப்பான்? எதை நினைப்பான்? வறுமை காரணமாக, தன்னை அநாதைச் சிகவாக விட்டு விட்டுத் தற்கொலை செய்துகொண்ட தன் பெற்றோரைப்பற்றி அவன் கேள்விப்பட்டானே, அந்தச் சோகத்தை நினைப் பானா? தஞ்சை, திருச்சி, சேலம், சென்னையென்று சுற்றி அலைந்து தன் சாண் வயிற்றைக் கழுவி மூடிக்கொண்டு உயி ருடன் வாழ்ந்து வருகிறானே, அந்தத் தன்னம்பிக்கையை எண்ணுவானா அவன்? - - கண்களை மூடிக்கொண்டு காசி நின்றுவிட்டார். அவருக் குத் தம் குடும்பத்தின் ஞாபகம் வந்திருக்கும். அவர் சுய நினைவு பெற்றார். "அழாதே, பாபு. உன்னோட நல்ல புத்திசத்திக்கு ஆண்டவன் உன்னை ரொம்ப மேன்மையாய் வச்சிடுவான். என்னை நம்பு. சரி, சரி, வா சாப்பிடலாம். தோசை சுட்டது ஆறிப்போயிடும். காப்பியை பிளாஸ்கிலே ஊத்தி வச்சிட்டு வந்தது நல்லதாய்ப் போச்சு. உனக்குத்தான் எதுவும் சுடச்சுட வேணுமே!’ என்றார். நன்றியறிவு மிகும்படியாகப் பாபு கண்களை உயர்த்திக் காசியை நோக்கினான். பின்னர், "நீங்க போங்க. நான் பின்னாடியே வாரேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து போக வேணாமுங்க, அண்ணே!' என்று தெரிவித்தான். அதுவும் சிலாக்கியந்தான், பாபு!” 翠 - 球 。来。 பச்சைமல்லித்தழைத் துவையல் என்றால் வீட்டுத் தலைவருக்கு மட்டுந்தான் மிகவும் பிடிக்கும் என்பதில்லை. அவ்வீட்டின் எடுபிடிப் பையனான பாபுவுக்கும் அதிகமாகப் பிடிக்கும். ஆகவே, வழக்கத்துக்கு மாறாக, அவன் அன்று தினம் ஆறு தோசை தின்றான்; நல்ல காப்பியும் கிடைத்தது. பின் ப்பம் பறியக் கேட்கவும் வேண்டுமா? அப்போதுதான், காசிமீது புகார் செய்ய வேண்டுமென்று தோன்றியதையும்,