பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியாகம் 27 பின்னர் அவரை மன்னித்ததையும் நினைக்க வேண்டியவன் ஆனான். அச்செயல் அவனுக்கே வேடிக்கையாகக்கூட இருந்தது. நான் சின்னப் பிள்ளை. காசி அண்ணனோ பெரிய மனுசர். நானாவது அவரை மன்னிக்கிறதாவது!" என்று சிந்தனை செய்த நேரத்தில், அவனையும் அறியாமல் நமட்டுச் சிரிப்பு வெடித்தது. - . "என்னப்பா நீ உன்பாட்டுக்குச் சிரிச்சுக்கிறே?" என்று கேட்டார் காசி. - - "ஒண்னுமில்லிங்க. சும்மாதானுங்க!" என்றான் பாபு. மறு கணம், காலையில் தான் அம்மாவிடம் காப்பி சாப்பிட்டதாகப் பொப்' சொன்ன நடப்பை நினைத்து அழுததையும் நினை வில் நிறுத்திப் பார்த்தான்; மறுமுறையும் பொய் சொல்லக் கூ!.ாது, அது தப்பு என்னும் தீர்மானம் பண்ணி னான். உடனே தான் நினைத்திருந்ததையும், பின்னர்க் காந்திஜியின் வாக்கு தன் மனத்தை மாற்றியதையும் விரிவாக எடுத்துரைத்தான் பாபு. . . . . . . . காசி துளிகூட வருத்தப்படவில்லை. பாபுவின் பேரில் : வெள்ளையாகச் சிரித்தார். பாபு, எனக்குக்கூடக் காந்தித் தாத்தாவோட வாசகங்களை ஒனக்குப் புரிஞ்ச மட்டுக்கும் ஒவ்வொன்னாப் நிதம் நிதம் சொல்லிக் காட்டேன்!” என்று தயவுடன் கேட்டுக்கொண்டார். - "நான் சொன்னால் எடுபடாதுங்க, அண்ணே. சைனா பஜாரிலே காந்திஜியின் பொன்மொழிப்புத்தகம் ஒண்ணு இனாமாய்க் கிடைச்சுது. அதைத் தாரேன். படிச்சுக்கங்க. அப்பாலே உங்களைச் சுத்தி ஒரு புது உலகம் தெரியத் தொடங்குமுங்க" என்றான் சிறுவன் பாபு. ஒரு விநாடி, காசி அண்ணன் கல்லாகச் சமைந்து விட்டார். - பாபுவுக்கு எதுவும் மட்டுப்படவில்லை. என்ன அண்ணே, கம்னு இருக்கிங்க?' என்று துருவினான். . . . . . . . கம்னு இருக்காம. பின்னே என்னாப்பா செய்கிறது? நான் படிக்காத மூடமப்பா!' என்று கண் கலங்கினார்.