பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாபுஜியின் பாபு, பாபு தன் முதலாளிக்கு ஏற்பட்ட விதியை நினைத்து மனம் உருகினான்: ஆனந்தரங்கத்தின் குடும்பம் சீரடைய ஆண்டவனைப் பிரார்த்தித்தான்; காசி காப்பியும் கையுமாக மாடிக்குச் சென்றதைக் கவனித்தான்; கயிற்று மிதியடியில் பறந்துகிடந்த அன்றையச் செய்தித்தாளை எடுத்துப் பிரித் தான்; புதிய சீட்டுக்குலுக்கலின் தேதி அச்சாகியிருந்த இடத்தை வெகு உன்னிப்புடன் கவனித்தான்; தன்னுடைய சொக்காயின் பையையும் காற்சட்டையின் பையையும் தடவிப் பார்த்தான்: தடவித்தடவிப் பார்த்தான். அந்த இரண்டு பைகளுமே காலியாக இருந்தன. ஏழை-அநாதைச் சிறுவன் பாபுவுக்குச் சிரிக்க மட்டுமே முடித்தது அப்போதைக்கு! அவன், சிரிப்பு அடங்குவதற்குள் அங்கிருந்து நகர்ந்தான்; கார் நிறுத்தும் கொட்டகைக்குப் பின்புறமிருந்த தன்னுடைய ஓய்வறையை அடைந்தான்; மகாத்மாஜியின் வாசகங்களைப் படித்தால்தான் தன் மனம் சாந்தி பெறும் என எண்ணி, அச் சிறு புத்தகத்தைப் பிரித்தான். அதில் அவன் பார்வையைக் கவர்த்த மணிவாசகம்: தியாகம் செய்வதனால் ஒரு வித இன்பம் பிறக்கா விட்டால், அந்தத்தியாகம் தியாகமே அல்ல! அவனுக்கு அப்பொன்மொழியின் பொருள் நன்றாகப் புரிந்தது. பாபுஜி, என்கிட்டே தியாகம் செய்ய என்ன இருக்கு, என்னோட இந்த அற்பமான உயிரைத் தவிர?' என்று மனம் நெகிழ்ந்தான். - - - அட்டையில் ஒட்டித் தொங்கவிடப்பட்டிருந்த அண்ணல் காந்தி அடிகள் அப்போது பொக்கைவாய்ப் புன்னகை உதிர்த் ததைப் பாவம், பாபு அறிய நியாயம் இல்லை!...