பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - 5 'என் கடன்" ஆனந்தரங்கம் அவர்களின் பங்களாவில் இருந்த குழாய்கள் எல்லாம் ஒரவஞ்சனையில்லாமல் இருபத்து நான்கு மணி நேரமும் தண்ணீரைப் பொழிந்துகொண்டேயிருக்கும். அந்தப் பண்பு இப்போதும் தொடர்ந்தது. பாபு ஒரு வாய்க்கு நாலு வாயாகத் தண்ணீர் குடித்து வைத்தான். மதியச் சாப்பாடு அவனுக்குக் கிடைப்பதற்கு நிச்சயம் இரண்டு - இரண்டரை மணி ஆகும். எல்லோரும் சாப்பிட்டாக வேண்டுமே! ராமன்-சீதைக்குப் பகல் உணவு பரிமாற வேண்டும். மேஜைச்சாப்பாடு. ஆமாம், சீமான் பிள்ளைகளுக்குத்தான். பாபு எங்கே போவது, மேஜைக்கு? குளித்துவிட்டு, உலர்ந்த உடைகளைப் போட்டுக் கொண்டு, தலையையும் சீவிக்கொண்டான். பயந்துவிடப் போகிறீர்கள் ? தலையை வாரிக்கொண்டான். உடைசல் கண்ணாடி ஒன்று அவனுக்கு அவன் முகத்தைக் காண்பித்தது. - முகத்திற்கென்ன? ராஜகளை ஓடியது. அவன் ராஜாவாகத்தான் பிறக்கவில்லை. அப்பா!... அம்மா! என்று வழக்கம் போல அவன் தன்னை சன்றவர் களை-முகம் காணக் கொடுத்து வைக்காத அந்தத் தெய்வங் களை - நிறைந்த மனத்துடன் நினைத்துக் கைகளைக் கூப்பினான். மதுரையில் அநாதை விடுதியில் தான் படிப்பறிவு பெற்ற நிகழ்ச்சியும் சிந்தையில் எழுத்தது. உடனே அவனுக்குக் காசியின் ஞாபகம் வந்தது. படிக்காத அந்தத் தந்தை உள்ளம் சற்று முன்னர்த்தம் குடும்பத்தின் கடிதத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டு ஆனந்தப்பட்ட நிகழ்ச்சியும் நெஞ்சில் நிறைந்தது. காசி அண்ணன், துளசிங்கம், காவேரி ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு பரிசுச்சீட்டு வாங்கிய தகவலும்