பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாபுஜியின் idffi. கிடைத்தது. எனக்கு லட்சம் ரூபாய் எதுக்கு? எனக்கு வேண்டியது சாண்வயிற்றுக்குச் சோறு அவ்வளவுதான். கேவலம், ஏழை-அநாதைப் பயலுக்கு இதைத் தவிர வேறே ஆசையே கிடையாது! இந்த மூணு பேரும் சேர்ந்து வாங்கி யிருக்கிற சீட்டுக்கு ஏதானும் பரிசு விழுந்தால் தேவலாம். பாவம், ஏழைபாழைங்க!... கஷ்டங்கள் விடியும் பணம் விழுந்தாக்க, அப்பறம் இந்தப் பாபுப் பயலை யாருடா பயலே நீ?"ன்னுதான் இவங்க கேட்பாங்க: கேட்டுட்டுப் போகட்டும். பணம் வந்திட்டால், குணம் மாறிப் போயிடும்னு சொல்லிக்கிறாங்க!. பணம் வந்திட்டால், குணம் மாறாமல் இருந்தாக்க, என்ன கேடாம்? எனக்கென்ன புரியுது. இந்த மாதிரிப் பெரிய சங்கதியெல்லாம்! என்று யோசித்தான். ஒரு கணம், காசு இருந்தால், ஒரு சீட்டு வாங்கிப் போடலாமே என்று ஒரு சபலம் வரும்; மறுகணம், காசுக்கு - ஒரு ரூபாய்க் காசுக்கு-எங்கே போவதாம் என்று ஒர் எக்கம் பிறக்கும். அடுத்த கணத்தில், அப்படியே பணம் கிடைத்துச் சீட்டு வாங்கினாலும், தனக்காவது பரிசு விழும் அதிர்ஷ்டம் வருவ தாவது என்று விரக்தி எற்பட்டுவிடும். சே! பெரிய தலைவலி இது! வேண்டாம் இந்த விவகாரம் என்று கடைசியில் ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டியவன் ஆனான் பாபு. -. - வெளிவாசலில் பிச்சைக்காரன் அலறிக்கொண்டேயிருந் பாபு எஜமானியிடம் சொல்ல ஓடினான். அம்மாவைக் காணவில்லை. காசியையும் காணோம். அடுப்படியை அடைந்து, பழைய சாதத்தில் இரண்டு அகப்பை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக்கொண்டு வாசற்புறம் வந்தான் பாபு. - - - - - - அதற்குள் தோட்டக்காரத் துளசிங்கம் பிச்சைக்காரனை எசி விரட்ட முயன்றுகொண்டிருந்தார். விவரம் அறிந்ததும், கோபம் மூண்டது பாபுவுக்கு. களும் ஓர் எழையாக இருந்துங்கூட உங்களுக்கு பிச்சைக்காரனை விரட்டியடிக்க மனசு வந்திச்சு?..."