பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பாபுஜியின் பாபு -ராஸ்கல், போயேண்டா!' பாபு திரும்பிவிட்டான்: பயத்தோடு திரும்ப வேண்டியவன் ஆனான். நானும் எவ்வளவோ முதலாளிங்களைப் பார்த் திருக்கேன், இந்தச் சின்ன வபசுக்குள்ளே. ஆனா. இந்த எசமான் ஒரு தனிரகம்! அம்மாடி!... ஆமா, ராஸ்கல்-ராஸ்கல்னு ஐயா திட்டினாரே, அதுக்கு என்னா அர்த்தமோ?... கடவுளே, இந்தக் கும்பிக்காக எத்தனை பாடு!... எத்தனை சோதனை ! ... வேலைக்காரப் பயல்னா எத்தனை இளக்காரம்!...” என்று சங்கடப்பட்டான்; கீழே வந்து நின்றான். காந்திஜியின் படத்தையே அன்போடு, பாசத்தோடு, பயத்தோடு, பக்தியோடு பார்த்தது பார்த்தபடி நின்றான். அவனையும் மீறிய விதத்திலே அவன் கண்கள் நிரம்பி வழிந்தன. அச்சமயத்தில் மாடிக்குச் செல்வதற்காகக் கொத்துச்சாவி யுடன் வந்தாள் அபயாம்பாள்; பாபு!" என்று கலவரத்துடன் அப்போதுதான் பாபுவுக்குச் சுயநினைவு மீண்டது. உடனே, கண்ணிரைத் துடைத்துக்கொண்டான். :: ஐயா கோபிச்சுக்கிட்டங்களா?" - இல்லையே!” ஐயாவுக்கு மனசு சரியில்லே. அப்படிக் கோபிச்சுக் கிட்டாலும், நீ பெரிசாய் எடுத்துக்கிடாதேப்பா!... பகவான், சோதிக்கிறான்!” என்றாள் வீட்டின் தலைவி. பாபுவுக்கு அப்பேச்சு உள்ளத்தைத் தொட்டது. "அ,ெ ல்லாம் இல்லீங்க. எதையோ நினைச்சேன். கண் க ங்கிடுச்சு." என்று பூசி மெழுகினான். காப்பி சாப்பிட்டு விட்டதாக அம்மாளிடம் காலையில் பொய் சொல்ல ந்ததற்காக, அம்மாளுக்குத் தெரியாமல் அழுதானே பாபு. இப்போது, அவன் அழுத அழுகை அம்பலமாகிவிட்டது! - - ராமனும் சீதையும் ஓடிவந்தார்கள்.