பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கடன் 37 அம்மா, துட்டு குடும்மா!' என்றாள் சீதை. கெஞ்சுத லுடன். . மம்மி சேஞ் வேணும்மா!” என்று நாகரிகமாகக் கெஞ்சினான் ராமன். - 'எதுக்கு இப்போ துட்டு? இன்னம் கொஞ்ச நேரத்திலே தான் சாப்பாடு சாப்பிட்டுப்பிடலாமே!” "ஊஹும். அதெல்லாம் சரி. இப்போ, காசு வேனும் பிஸ்கட் வாங்கனும்!” என்றாள் சீதை. "உனக்கு என்னா வேனும், ராமா?" "எனக்கு ஐஸ் ஃபுருட்!” ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாள் அபயாம்பாள். பாபு, இந்தா இரண்டரை ரூபாய். இவுங்களுக்கு ஆளுக்கு ஒரு ரூபாய்க்கு வேணுங்கிறதை வாங்கி வந்து கொடுத்திட்டு, பாக்கி ஐம்பது காசை நீ எடுத்துக்க!' என்றாள்; இரண்டரை ரூபாயை நீட்டினாள். பாபு மெளனமாக அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டான். அபயாம்பாள் மாடிக்குச் சென்றதுதான் தாமதம்: புறப்படப் போன பாபுவிடம் மெள்ள அண்டி வந்தான் ராமன். பாபு, உனக்கு எதுக்கடா ஐம்பது காசு? அதுக்கும் சேர்த்து, சின்ன எசமானுக்கு பிஸ்கட் வாங்கி வந்துடு. நீ தின்னுப் பழக்கப்பட்ட ரொட்டி வேணாம். எனக்குப் பிரிட்டானியா பிஸ்கட்தான் வேணும். மாற்றி வாங்கியாந்தாயோ, உன் மூஞ்சியிலே விட்டு வீசிப் போடுவேன்'... என்று எச்சரித்தான். - பணக்காரப் பிள்ளைகளுக்கென்று இப்படியொரு வாய்க் கொழுப்பா? பாபு பதில் ஆடவில்லை; மெளனமாகப் போய்வி ೬೬Tಣಿ * பத்து. பதினைந்து நிமிஷம் கழித்திருக்கும்.