பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாபுஜியின் பாபு சீட்டு வாங்கியதைப் பார்த்தான். அவனுள் ஏக்கம் படர்ந்தது. கைகளை விரித்துப் பார்த்தான், எதுவும் இல்லை சட்டைப் பையையும் கால்சட்டைப் பையையும் துழாவினான். முன் இருந்த கரும்புத் துணுக்குகூட இப்போது இல்லை. நடந்தான் பாபு. х ஒரு ரூபாய்க் காசு இப்போ என் கையிலே இருந்தா, எவ்வளவோ பூரிச்சுப் போயிடுவேனே !’ என்று பிரமாதமாக ஆராய்ச்சி பண்ணியது அப்பிஞ்சு இதயம். . ஒரு ரூபாய்க்கு எங்கே போவான்?. வேதனை, நெட்டுயிர்ப்பு, ஆசை, கனவு, லட்சியம், ஏக்கம், ஏமாற்றம் போன்ற வெவ்வேறு வகை கொண்ட உணர்வுகளால் உந்தப்பட்டான் அச்சிறுவன். பங்களாவிலே என்னைத் தேடினாலும் தேடுவாங்களே !' என்ற புதிய கவலை கலவரமாக உருவெடுத்தது. வேகமாகப் பங்களாவுக்கு விரைந்தான் பாபு: மாடிப்படியின் மேற்கட்டில் நின்றபடி, உள்ளே எட்டிப் பார்த்தான், ஆனந்தரங்கம் கணக்குப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அபயாம்பாள் சிந்தனை வசப்பட்டு, அருகில் அமர்ந்திருந் தாள். நீங்க சொன்னபடி செஞ்சுப்பிடலாம். பழையபடி நாம புதுக்கோட்டைக்குப் போகப்படாதுங்க. வேறு எகங்ாகிலும் போயிடலாம். ஒரு விடா வாடகைக்குக் கிடைக்காம போயிடும்? விதி நம்பளை இப்படி ஆட்டிப் படைக்குதே!" என்று உருக்கமாகச் சொன்னாள். . ஆனந்தரங்கத்தின் முகம் சலனம் அடைந்தது. பிள்ளை களை நினைக்கிறப்பதான் மனசு தாளல்லே. இனிமேல் எப்படித்தான் பஸ்ஸிலே கான்வென்டுக்குப் போகப் போகுதுங் க்ளோ? ஊம். அபயம் லாட்டரி டிக்கட்டுங்களையெல் ※珍、 த்திரமாய்ப் பீரோவிலே வச்சிருக்காயல்லவா? நமக்கு ப் போகுது? என்னமோ ஆசைக் கோளாறு.