பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியக் கவசம் 43 இன்னம் நாலைஞ்சு நாள்கூட இல்லே குலுக்குறதுக்கு ' என்றார் முதலாளி. --- - எ ல் ல ம் பத்திரமாகத்தான் வச்சிருக்கேனுங்க. பிள்ளைங்க பேருக்குத்தானே டிக்கட்டுகளை வாங்குனிங்க?" "ஆமா, பேரெல்லாம் இப்போ முக்கியமில்லையாம், டிக்கட் யார் வச்சிருக்காங்களோ, அவங்களுக்குத்தான் பரிசு விழுந்தால் பணம் கிடைக்கும் ' - "என்னமோ, பகவான் சித்தம் எப்படி இருக்கோ, அதையுந்தான் பார்த்திடுவோம். மனசறிஞ்சு ஓர் ஈ எறும்புக் குக்கூட நாம தீங்கு செஞ்சதில்லே!” சரி. சரி, நீ நிம்மதியாவும் தைரியமாவும் இரு, வருத்தப்படுகிற விவகாரம் என்னோட இருக்கட்டும் ' ராமனும் சீதையும் ஜாஸ் சங்கீதத்தை இரசித்துக் கொண்டிருந்தார்கள். யாரோ தன் மண்டையில் அடிப்பது மாதிரியான ஒரு வலி பாபுவுக்கு எழத் தொடங்கியது. பாபு கீழே இறங்கினான். மாந்தருக்குள் ஒரு தெய்வமான - கண்கண்ட தெய்வ மனிதரான-காந்திஜியின் படத்தை நெஞ்சம் உருக, கண்ணிர் உருகி வழியக் கும்பிட்டான். பாபுஜி !...” என்று வாய்விட்டு அழைத்தான் பாபு. அவன் உள்ளத்தில் பலபல நினைவுகள் சத்தியத்தின் ஒளிபட்டு மின்னின. அப்படி மட்டும் நடந்து விட்டால்?... ஆஹா' என்று மெய்ம்மறந்தான். என் நான் தினைப்பது போல நடக்கக்கூடாது?’ என்று ஒரு தன்னம்பிக்கை யும் ஒளி காட்டியது. எதோவொரு தீவிர சங்கற்பம் கொண்டவனுக்கு நேராக அவன் நடந்தான். அப்போது, அவனது காலடியில் ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தான், அநாதை பாபு. ஒரு ரூபாய் நோட்டு ! பாபு அதைக் குனிந்து எடுக்கப் போனவன், பாம்பைக் கண்டாற்போலப் பின்னடைந்தான்: மறுபடியும் அந்த ருபாய்த் தாளை விழித்துப் பார்த்தான். அந்த ரூபாய் நோட்டு அழகான