பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாபுஜியின் பாபு பரிசுச் சீட்டாக அவர் மனக்கண்ணில் தோன்றியது. அப்போது அவன் மனச்சாட்சியும் விழித்துக்கொண்டது. மகாத்மா காந்தி அடிகளின் குரலொன்று கம்பீரமான ஆணையாக ஒலிப்பது போல ஒர் உள்ளுணர்ச்சி பீறிட்டது. "சத்தியந்தான் என் கவசம் அதுவேதான் என்னை எதிலிருந்தும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது!...” என்ற வாசகம் அவனை மெப் சிலிர்க்க வைத்தது. கவசம்னா பாதுகாக்கிற பொருள் போலே. நல்ல சமயத்துக்கு என்னைக் காப்பாத்திடுச்சு காந்தி வாசகம். ம்... நான் கெட்ட நோக்கத்தோடவே இந்த ஒரு ரூபாய் நோட்டைப் பார்க்கலைதான். ஆனாலும், நானே என்னோட புத்தியை என்ன கண்டேன்! பாபுஜி !...” என்று ஆனந்தக் கண்ணிர் சொரிந்தான். தெளிந்த அமைதி சுரந்தது அவனது இளம் உள்ளத்தில். பிறகு, அந்த ரூபாய்த்தாளை எடுத்தான், வேலை கேட்டு இந்தப் பங்கனாவுக்கு வந்தபோது முதலாளி ஆனந்தரங்கம் கேட்ட முதல் கேள்வி இதுதான். சஏன்டா பயலே! முன்னே வேலை செஞ்ச இடத்திலேருந்து என் வந்திட்டே? எதானும் திருடினியா' என்று கேட்டார். ஐயா, அந்த மாதிரி அற்ப ஜாதிக்கு நான் பிறக்கல்லீங்க. முந்தி வேலை பார்த்த இடம் செயலில்லாமல் போயிட்டுது. - நான்ே நிலைமையைப் புரிஞ்சு. அவங்ககிட்டே சொல்லிக்கினு வந்திட்டேனுங்க. என்னை நம்பினால் வேலை கொடுங்க; நாணயமாய் நடப்பேன். இல்லாட்டா நான் வந்த வழியே போறேன். கையிருக்கு. மூட்டை தூக்கி உழைச்சுப் பிழைப்பேனுங்க. என் விதி நான் அநாதையாப்ப் போயிட்டேன்!...” என்று வேதனை மூள வெளியிட்டான். அ ச ந் து வி ட் ர் மு. த ல | ளி. பேஷ்! நீ பொளைச்சுக்கவே!' என்று பாராட்டி வேலை கொடுத்தார். பாபு, கண்களைத் துடைத்துக்கொண்டு. தலையை நேர்மையுடள் நிமிர்த்தினான். இப்போது அவன் பிஞ்சுக்கரங்களில் அந்த ஒரு ரூபாய் இருந்தது. • அம்மாவிடம் அதைச் சமர்ப்பிக்க எண்ணித் திரும்பினான். -