பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-7 戟 எவ்வளவு வேகமாக ஓடுகிறது காலம்!... இடையிலிருந்த நாலைந்து நாள் பொழுதும் யாதொரு சோதனையும் இல்லாமல் விடிந்தது. x காசி அண்ணன் குழாம் எந்த நேரத்திலும் அப்பங்களாவை விட்டு வெளியேற நேரிடுமென்று எதிர்பார்த் திருந்தது. - பாபுவுக்கு அதைப்பற்றிய விசாரம் துளியாவது இருக்க வேண்டுமே! ஊஹூம், இல்லை! இல்லவே இல்லை! மத்தியாள்னம் சாப்பிட்டுவிட்டு, ஒரு தூக்கம் போட்டான்; பிறகு எழுந்தான். மெதுவாக வெளிப்பக்கம் வந்தான் பாபு: முன்பு வந்த மாதிரி ஆட்டுக்குட்டியொன்று தோட்டத்தை அளப்பதைக் கண்டான்; தாத்தா!' என்று குரல் கொடுத்தான். - துளசிங்கம் சுரத்து இல்லாமல், கடனே' என்பது போல் ஆட்டுக்குட்டியை நோக்கி அன்ன நடை நடந்துகொண் டிருந்தார். - - - அந்த ஆட்டுக்குட்டிக்கு மேலைநாட்டுப் பூஞ்செடிகளென் றால், என்ன தான் பிரியமோ? துளசிங்கம் தாத்தாபேரில்தான் பாபு சினம் கொண்டான், முதலாளி வீட்டில் இருக்கிறார். ஆட்டுக்குட்டியின் விளையாட்டைப் பார்த்துவிட்டால், பாவம் தாத்தாவுக்குச் சீட்டு கிழிந்துவிடுமே! ւյrւ: விரைந்தான்; ஆட்டுக்குட்டியை விரட்டினான். :தாத்தாவுக்குப் பரிசுச்சீட்டுக் கனாதான் போலே சதாவும்!" என்றான் அவன். - - - - தாத்தாவுக்குப் பற்கள் தெரிய சிரிப்பு வெடித்தது. ஒரு வேளை, அவர்கள் வாங்கியிருக்கும் சீட்டுக்குப் பரிசு விழுந்துவிடுமோ, என்னவோ? ... . . . .” - - .: L1:r. u (tr.~~4