பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாபுஜியின் பாபு விழட்டும் விழட்டும்! . அவர்கள் மூவருக்குந்தான் பற்கள் கெட்டியாச்சே! பாபு, இண்ணிக்குத்தான் சீட்டு குலுக்கிக்கிட்டு இருக்காங்க! எங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ?” என்று அங்கலாய்த்தார் கிழவர். - ஒரே ஒரு ரூபாய் எவ்வளவு பெரிய கனவைக் காட்டுகிறது! பாபுவுக்கு அச்செய்தி நினைவில் இருந்துகொண்டுதான் இருந்தது. என்றாலும், அதைப்பற்றி அவன் துளிகூட ஆசைக்கனவு கொள்ளவில்லை; நேர்மையான ஆசை மட்டுமே கொண்டிருந்தான். அவன் சீட்டு வாங்கிய விஷயத் தையும் காசி அண்ணனுக்குக்கூட வெளிக்காட்டவில்லை. காசி அண்ணன் சிரிப்பார் சொல்லாமல் இருப்பது பொய்யோ? - இப்படி ஒரு கவலை எழுந்தது. அது பொய்யல்ல என்றும் துணிவு பெற்றான். வாங்கினாயா?" என்று கேட்டு, இல்லை' என்றால்தானே பொய்யாகும்? கேட்காமல் இருக்கும்போது, எதற்காக முந்திரிக்கொட்டை போல விவரம் கூற வேண்டும்? தாத்தா கனவு காண்பதை நிறுத்தவில்லை. ஆகவே, அவரது இன்பக்கனவில் குறுக்கிட மன மில்லாமல், பாபு தன் இருப்பிடத்தை அடைந்தான்; பரணி லிருந்த காந்திஜியின் பொன்மொழிகள் புத்தகத்தில் செருகி. வைத்திருந்த அந்தப் பரிசுச்சீட்டை எடுத்தான் கண்களில் . ஒற்றிக்கொண்டான். அவன் கைகள் தாமாகவே தொழுதன. ஒரு கணநேரம், இனிய சிரிப்பொன்று அவனையும் அறியாமல் உதடுகளில் விளையாடியது. சிட்டைப் பத்திரமாக இருந்த இடத்தில் வைத்தான். சிறிய பென்சில் ஒன்று விழுந்தது. அதையும் உரிய இடத்திலே நிதானமாக எடுத்து வைத்தான்: அன்றைக்கு மதிபத்திலே எஜமானரும் எஜமானியும் வருத்தத் துடன் பேசிக்கொண்டிருந்த நடப்பையும் நினைவூட்டிக் கொண்டான். முதலாளிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்தாக்க எவ்வளவோ சிலாக்கியமாயிருக்கும்: - கடன்