பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. ப்ரபுஜியின் பாபு ஆனந்தரங்கம் கல்வரத்துடன் அக்கடிதத்தின் உறையைக் கிழித்தார். யார் என்ன? என்று கடிதத்தின் விவரம் அறிய அவருக்கும் தோன்றவில்லை. பாபுவும் அங்கு நிற்கவில்லை! கடிதம் பேசுகிறது. ஆம் : கடிதத்துக்குப் பேசத் தெரியும். சாமான்யமான கடிதமா அது ? பென்சிலால் எழுதப்பட்டிருந்தால், என்ன ? அக்கடிதம் பேசுவதைக் கேட்கின்றீர்களா? "ஐயா அவர்களுக்கு, அறுபத்தஞ்சு நாள், நான் உங்கள் உப்பைத் தின்றேன். அந்த உப் பானது எனக்கு ஒரு கடமையைப் படிச்சுக் கொடுத்தது. நீங்களும் அம்மாவும் பிள்ளைங்களும் பழைய மாதிரி நிம்மதி யோடு வாழ வேணுமென்று ஆண்ட வனைக் கும்பிட்டேன். என்னுடைய பிஞ்சு மனசிலே ஒரு பெரிய கனவு தோணிச்சு. மூட்டை சுமந்தேன், ஒரு ரூபாய் கிடைச்சுது. பரிசுச் சீட்டு ஒண்ணு வாங் கினேன். உங்க பேருக்கு. அதுக்கு முதல் பரிசு லட்ச ரூபா விழுந்திருக்கு. மண்ணடி தபாலாபீசுக்குப் பக்கத்து மருந்துக் கடையிலே வாங்கின சீட்டுங்க!... உங்க பங்களா உங்களோடதாகவே எப்பவும் இருக்க வேணும் பகவான் நம்பளைக் காப்பாத்திவிட்டார். பரிசுச்சீட்டையும் இத்தோடு வைத்திருக்கிறேன். அம்மா வுக்கு - என்னோட் தாய்க்கு - என் வணக்கம். இந்த எழை அநாதைச் சிறுவனை நீங்களெல்லாம் மறந்திட