பக்கம்:பாபுஜியின் பாபு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - 1. அன்பு கேட்காது, கொடுக்கும்: ‘தமிழ் அன்னை இல்லத்தின் முகப்பு நடையில் ஓடிக் கொண்டிருந்த அழகிய அந்தச் சுவர்க்கடிகாரத்தின் உச்சியில் இருந்த சின்னஞ்சிறு பூஞ்சிட்டு ஆறு தரம் ஒயிலுடன் குரல் கொடுத்துவிட்டு, ஓடாமல் இருந்தது! - 'ஆஹா!...” பாபு வழக்கம் போலவே அன்றும் தனக்குத்தானே சிரித் துக்கொண்டான். அவனுடைய பால்முகத்தில் புத்தம்புதிய களை பிறந்தது. வாரி விடப்படாத கிராப்புத்தலையைப் புதிய உற்சாகத்தோடு திருப்பினான்; பிறகு தன்னைத்தானே ஒரு முறை குனிந்து பார்த்துக்கொள்ளவும் தவறவில்லை. அப் போது அவனையும் மீறிய விதத்திலே அவனது அழகான கண்கள் கசியத் தொடங்கின. மறுகணம், தெய்வமே!’ என்று மெல்லிய குரலில் அழைத்தான். ஒரு நொடியில் அவ னது கண்கசிவு மாறியது; மறைந்தது. கடவுளே! நான் உன்னை மறந்திட்டு. என்னை நினைச்சேன்: அழுகை வந்திச்சு: இப்போ, என்னை மறந்திட்டு, உன்னை நினைச் சேன்; சிரிப்பு வருது!... உன்னோட குஞ்சுக்குக் குறுணை போடப் பழகியவனாச்சே நீ என்கிற ஆனந்த ரகசியத்தை எப்பவோ புரிஞ்சுக்கிட்ட பொடியனாச்சே நான்!-பாபுவின் இனிய நினைவுகள் நன்றிக் கசிவுடன் அடங்கின. அடங்காத ஆனந்தத்துடன் அவன் மீண்டும் அந்தப் பூஞ்சிட்டைப் பர்த் தான். கடமையின் உணர்வு அவனைத் தட்டி எழுப்பியது போலும்! - - - - - நடையின் கீழ்ப்புறத்தில் வந்து நின்றான் பாபு. அவனுக்கு எதிரே பெரியதொரு வீலைக்கண்ணாடி நின்றது. - - அவன் கண்கள் கண்ணாடியில் பதிந்தன.