தம்பியின் கடிதம் கண்டு கண்ணீர் சிந்திக் கதறுகின்ற தமையனையும், அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றத் துடிக்கின்ற தம்பியையும் பார்ப்பதே அரிதல்லவா? ராஜேந்திரர் குடும்பம் வைதிகமானது பழமையில் ஊறியது. அந்த வீட்டின் உறவினர்கள் எல்லாம் ஒரே குடும்பத்தில் வசித்தார்கள். கூட்டுக் குடும்பம்தான் இந்திய நாகரீகத்தின் உயர்ந்த உறுப்பு. கடைசி வரையில் அவர் இதை உறுதியாக நம்பினார்.
இராஜேந்திரர் குடியரசுத் தலைவர் ஆனதற்குப் பிறகு, இந்துகோட் மசோதாவுக்கு அவர் முழு ஆதரவு அளிக்காததற்குக் காரணம் இதுவே. அவருடைய குடும்ப அமைப்பு பழைய விதிகளை ஒட்டியே இருந்தது. வீட்டில் மூத்தவர்களுக்குத் தாம் முதல் மரியாதை அவர்களைக் கலந்து கொண்டே எதையும் செய்வார்கள்,
மகேந்திர பிரசாத், ராஜேந்திர பிரசாத்தை விட எட்டு வயது பெரியவர். ஆகையால், அண்ணாவின் சொல்லை அவர் ஒரு நாளும் மீறியதில்லை. அண்ணாவுக்கோ தம்பியிடம் அளவுக்கு மீறிய அன்பு, பொதுப்பணிகளில் கலந்து கொள்ள தம்பி பாபுவுக்கு அவர் முழுச் சதந்திரமும் அளித்தார்.
இராஜேந்திரர் இல்லாத காலத்தில் அவரே குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். இவ்வாறு அவர் வீட்டுப்