பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

45

அவதிப்பட்ட விவசாயிகள் அவரிடம் தங்களது எல்லாக் குறைகளையும் முறையிட்டுச் சொன்னார்கள். அவர்களுக்கு அவர் ஊட்டிய தைரியத்தாலும், ஊக்கத்தாலும் அவர்கள் துணிவடைந்தார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிடவும் முன்வந்தார்கள்.

வெள்ளைக் குத்தகைதாரர்கள் காந்தியடிகளது போராட்டச் செயல் ஏற்பாடுகளை அறிந்து கோபமடைந்தார்கள். அரசாங்கம் வெள்ளையர்களுடையது அல்லவா? அதனால் திருடனுக்குத் தேள் கொட்டிய நிலைக்கு ஆளானார்கள்.

மற்ற வெள்ளையதிகாரிகளுக்கு குத்தகைதாரர்கள் தந்தியடித்து காந்தியாரின் போராட்ட அபாயங்களைத் தெரிவித்தார்கள். உடனே எதிர்பாராமல் கெடுபிடிகள் சூழ காந்தியடிகளைக் கைது செய்து விட்டார்கள். அதைக் கண்ட சம்பரான் ஊர் பொதுமக்கள், பெரிய மனிதர்கள் திரளாகத் திரண்டு விட்டார்கள். இதை அறிந்ததும் ஊர் திரும்பிய இராஜேந்திர பிரசாத் அவ்வூர் மக்களோடு கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தார். ‘காந்தியை விடுதலை செய்’ என்ற கோஷங்கள் எங்கும் எதிரொலித்தன. ராஜேந்திர பிரசாத் காந்தியாரைக் கண்டு பேசி, ‘எதற்கும் நாங்கள் தயார்’ என்ற உறுதியை அவரிடம் தெரிவித்தார்.

பொதுமக்கள், பெரிய மனிதர்கள், செல்வாக்குடையோர் நிர்ப்பந்தம் நேரம் ஆக ஆகக் கடுமையானது. இதையறிந்த பீகார் அரசு அவரைக் கைது செய்த இடத்திலேயே விடுதலை செய்து விட்டது. அதே இடத்தில் அவுரி விவசாயிகள் குறைகளை அகற்றிட அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, அக்குழுவுக்குக் காந்தியடிகளையுமம் ஓர் உறுப்பினராக நியமித்தது.

அவுரி சாகுபடி செய்வோரது விசாரணைக் குழு காலம் கடத்தாமல் விவசாயிகளின் குறைகளை விரைவாகவே விசாரித்தது. அக்குழு முடிவின் பேரில், அவுரி சாகுபடியாளர்களது குறைகளை