பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாபு இராஜேந்திர பிரசாத்


1. நேருவின் சுயசரிதத்தில்
பாபு இராஜேந்திர பிரசாத்

“சில சமயங்களில் நான் காங்கிரஸ் காரியதரிசி என்ற முறையில் பீகார் மாகாண காங்கிரஸ் கமிட்டிக் காரியாலயத்தைப் பரிசோதனை செய்யச் சென்றிருக்கிறேன். காரியாலயத்தை அவர்கள் நன்றாக வைத்துக் கொள்ளவில்லையென்றும், வைத்துக் கொள்ளும் திறமை அவர்களுக்கு இல்லையென்றும் கருதி நான் அவர்களைக் கடுமையான வார்த்தையில் கண்டித்திருக்கிறேன்.

நிற்பதைக் காட்டிலும் உட்கார்ந்திருக்கலாமே! உட்கார்ந்திருப்பதைக் காட்டிலும் படுத்துக் கொண்டிருக்கலாமே! என்பதைப் போன்ற மனப்பான்மை பீகார் காங்கிரஸ்காரர்களுக்கு இருந்ததாகத் தோன்றிற்று. காரியாலயத்தில் சாமான்கள் அதிகமாயில்லை. ஏனென்றால், அவர்கள் நாற்காலி, மேஜை முதலிய வழக்கமான காரியாலய செளகரியங்கள் இல்லாமலே வேலை நடத்திக் கொண்டு வந்தார்கள். என்றாலும், அக்காரியாலயத்தை நான் எவ்வளவோ கண்டித்தாலும், காங்கிரஸ் லட்சியப்படி பார்த்தால், அந்த மாகாணம்