பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பாபு இராஜேந்திர பிரசாத்

சூழலுக்குத் தகுந்தவாறும் மாற்றிக் கொள்ளவது இன்றும் கூட வழக்கம்.

ஆனால் ராஜன் பாபு மட்டும் தனது ஆடைகளை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார். வழக்கமான கதராடைகளையே அணிந்தார். இதைக் கண்ட மேனாட்டவருக்கு வேடிக்கையாகவே இருந்தது. சிலருக்கு ஏளனமாகவும் காட்சியளித்தது. ஆனால், வேறு சிலர், மோட்டா கதர் துணியின் மர்மத்தை ராஜன் பாபுவிடமே கேட்டார்கள். அதற்குராஜன் பாபு பதில் கூறியபோது, ‘கதர் இந்திய தேசியத்தின் சின்னம்’ என்றார். இந்தியப் பொருளாதாரத் தத்துவத்தையும் அவர் விளக்கினார். இவ்வாறாக ராஜன் பாபு, ஐரோப்பிய நாடுகளில் காந்தீய தத்துவங்களை விளக்கிக் கூறி விட்டு தனது பயணத்தினையும் முடித்து, எகிப்து நாட்டுக்குச் சென்று, பிறகு இந்தியா வந்து சேர்ந்தார்.