பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

99

புற்றுநோய் இல்லையெனில், லேப்ராஸ்கோப்பி மூலம் கட்டியின் அளவைப் பொறுத்து அகற்றி விடலாம். கர்ப்பப் பை வாயில் ஏற்படும் புற்று நோயைக் கதிர் வீச்சு மூலம் அகற்றலாம். மூன்றாவது கட்ட நிலையிலுள்ள புற்றுநோய்க்குக் கதிர்வீச்சு மூலம் சிகிச்சையளிப்பது நல்லது. இதனால் ரத்தக்கசிவும், வலியும் குறைய வாய்புள்ளது. ஆனால், 0.2 நிலையிலுள்ள புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்த பின்பு, கதிர்வீச்சு அளிப்பது நல்லது.

இதைத்தவிர மருந்துகள் மூலமாகவும் (ஹீமோதெரப்) சிகிச்சையளிக்கத் தற்போது வசதிகள் உள்ளன. பெரிய அளவிலான கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அகற்றமுடியும். முத்துப்பிள்ளை தொடர்பாக ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளை, மருந்துகள் மூலமாகக் கரைக்க முடியும்.

தடுப்பு முறை : கர்ப்பப் பைக் கட்டி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. டாக்டர்கள் அனுமதியில்லாமல், ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. வெள்ளைபடுதல் பிரச்சனை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனை பெற்று ஆண்டுதோறும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

எப்போது திருமணம் : 18 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு குழந்தைகளுக்கு நடுவில், மூன்று ஆண்டு இடைவெளி தேவை. இடையில் கருவுற்றால் கருக்கலைப்புக் கூடாது. 40 வயதுக்கு மேலான பெண்கள், ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆக, கர்ப்பப் பையில் நோய் வராமல் காத்துக் கொள்வது ஒவ்வொரு பெண்ணின் கையில் உள்ளது.